தமிழை விட தெலுங்கு பிக் பாஸ் சூப்பர்.. ஜோவிகாவை அங்க அனுப்பி இருக்கணும்.. வனிதா கருத்து..!!

Vanitha Vijayakumar: விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது பிக் பாஸ். 6 சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசன் மற்ற சீசன்களை காட்டிலும் வித்தியாசமாகவே போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சீசனால் கமல்ஹாசன் அவர்களுக்கும் சமூக வலைதளத்தில் சில அவ பெயர்கள் கிடைத்தது. இதனிடையே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்து வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிம்புவுக்கு முன்னாடி முந்திக்கொண்ட சந்தானம்!.. அந்த பிக் பாஸ் போட்டியாளருக்கு அப்படியொரு வரவேற்பு!..

அந்த இறுதி போட்டி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அவ்வப்போது நாகார்ஜூன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தையும் கமல் நடந்து கொள்ளும் விதத்தையும் ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.

BIGG BOSS TELUGU

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் கருத்து ஒன்றை முன் வைத்துள்ளார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் விமர்சித்து வருகிறார் வனிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லும் கமல்ஹாசன்.. நடுவராக களம் இறங்குகிறாரா நாட்டாமை சரத்குமார்?

இந்த நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசிய வனிதா பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியை விட தெலுங்கில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 அற்புதமாக இருந்ததாக கூறியுள்ளார்.

ரோபோட் எல்லாம் வீட்டிற்குள் அனுப்பி சுட வைப்பதாகவும் நாகார்ஜூன் சீசன் 7 வெற்றிகரமான சீசன் என்று கூறியதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு தனது மகள் ஜோவிகாவை தமிழ் பிக் பாஸுக்கு அனுப்பியதை விட தெலுங்கு பிக் பாஸுக்கு அனுப்பி இருக்கலாம் என்று யோசித்ததாகவும் கூறியுள்ளார்.

20 வருஷ கனவு!.. அஜித்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் நெகிழ்ச்சி!

தமிழ் மக்கள் வனிதா அவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்திற்காக தனது ரசிகர்களுக்காக தான் ஜோவிகாவை ஒரு பரிசாக பிக் பாஸ் தமிழுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...