சுந்தர்.சி மகளுக்கு சீட் கொடுக்காத பள்ளி நிர்வாகம்.. அன்பே சிவம் படத்தால் அடுத்து வந்த நல்ல செய்தி

உள்ளத்தை அள்ளித்தா என்ற எவர்கீரின் காமெடி படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் இயக்குநராக அவதாரம் எடுத்த சுந்தர் சி. இன்று அரண்மனை 4 படம் வரை இயக்குநராக தனி முத்திரையைப் பதித்து வருகிறார். முறை மாப்பிள்ளை இவர் இயக்கிய முதல் படம் என்றாலும் சில காரணங்களால் அப்படத்தின் பாதியிலேயே விலகி வந்தார். பின் இவருக்குப் பதிலாக பிரபு சாலமன் மீதப் படத்தை எடுத்து முடித்தார். உள்ளத்தை அள்ளித்தா படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைய தொடர்ந்து காமெடிப் படங்களாக இயக்கி வந்தார்.

நடிகர் கார்த்திக்குடன் இவரது கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்ஆக தொடர்ந்து இருவரும் மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே, அழகான நாட்கள் போன்ற படங்களை இயக்கினார். தொடர்ந்து காமெடிப் படங்களை இயக்கி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த சுந்தர் சி. நடிகர் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓட தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர் ஆனார்.

அதன்பின் யாருமே எதிர்பாராத வகையில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் கைகோர்த்தார். இது சுந்தர் சி படமா என்று அனைவரும் ஆச்சர்யப்படும் வண்ணம் அன்பே சிவம் படத்தினை இயக்கி அனைத்து இயக்குநர்களையும் புருவம் உயர்த்த வைத்தார்.

காமெடி இயக்குநருக்குள் இப்படி ஒரு கதையம்சம் உள்ள படமா என்று ரசிகர்களும், சினிமா உலகமும் வியக்கும் வண்ணம் அன்பே சிவம் படத்தை இயக்கினார். அன்பேசிவம் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது. ஆனால் அப்போது அந்தப் படத்தினைக் கொண்டாடதவர்கள் இப்போது கொண்டாடுகிறார்கள்.

பருத்திவீரன் சித்தப்புவாக முதலில் நடிக்கவிருந்த பிரபலம் இவரா? சரவணன் தேர்வானது இப்படித்தான்.

இந்தப் படம் வெளியான தருணத்தில் சுந்தர்.சி தனது மகளுக்காக மனைவி குஷ்புவுடன் சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் அட்மிஷனுக்காக போயுள்ளார். அப்போது அந்தப் பள்ளி நிர்வாகம் இங்கு படிக்க வேண்டும் என்றால் குழந்தை பிறந்த உடனே அட்மிஷன் போட்டுவிடுவார்கள். நீங்கள் என்னவென்றால் 20 நாட்களுக்கு முன்புதான் வந்திருக்கிறீர்கள் என்று கூற, என்ன செய்வது என்று தெரியாத சுந்தர்.சியும், குஷ்புவும் பள்ளி முதல்வரை சந்தித்திருக்கிறார்கள்.

பள்ளி முதல்வர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்கள் இருவரையும் அறிந்திருக்கவில்லை. எனவே இவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் இந்தி சினிமா பற்றி கூறியிருக்கிறார். அப்போது அவர் இந்தியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த Mr and Mrs Iyer என்ற படத்தினைப் பற்றிக் கூறி, பின் தற்போது அன்பே சிவம் படம் நன்றாக இருக்கிறது எனவும் தெரிவிக்க, உடனே குஷ்பு, அன்பே சிவம் இயக்குநர் இவர்தான் என்று கூற, உடனே பள்ளி முதல்வருக்குப் பிடித்துப் போய் உங்கள் மகளுக்கு அட்மிஷன் போட்டுத்தருகிறேன் என்று கூறி பின் அந்த பிரபல பள்ளியில் சேர்த்திருக்கின்றனர்.

கமல் அன்பே சிவம் பற்றி சுந்தர் சி யிடம் இதற்கான பலனை நீங்கள் பின்னால் அனுபவிப்பீர்கள் என்று கூறியிருக்கிறார். அதுவே நிஜமாக நடந்திருக்கிறது. இப்போது அன்பே சிவம் படத்தினைக் கொண்டாடி வருறோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...