பூர்ணிமா பேசியதெல்லாம் திருவாசகம் அப்படிதானே கமல் சார்!.. பிக் பாஸ் ஹோஸ்ட்டை மாத்த கிளம்பிய எதிர்ப்பு!..

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை முதல் சீசன்ல இருந்து ஏழாவது சீசன் வரை தொடர்ந்து நடத்தி வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். ஆரம்பத்தில் அரசியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலந்து இவர் பேசியது ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆனால், கோவையில் தோல்வியைத் தழுவிய பின்னர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் பேசினாலே அறுவை என்கிற நிலை மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர்.

ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் கொடுக்கும் சில தீர்ப்புகளுக்கு எதிராக ரசிகர்கள் போர்க்கொடி தூக்குவது வழக்கம் தான். ஆனால் இந்த சீசனில், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து அவர் வெளியே அனுப்பிய நிலையில், தொடர்ந்து கமல்ஹாசனை போட்டு பிக் பாஸ் ரசிகர்கள் துவைத்து எடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் தொகுப்பாளருக்கு வந்த சிக்கல்?:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விமர்சனம் செய்பவர்கள் கூட, இதற்கு முன் இல்லாத அளவுக்கு தொகுப்பாளரான கமல்ஹாசனை கழுவி ஊற்றி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த இனியும் கமல் சரிப்பட்டு வர மாட்டார் என்றும் அவரை நீக்கிவிட்டு சிம்பு அல்லது வேறு யாரையாவது கொண்டு வரலாம் எனக்கு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு காரணம், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சொருகிடுவேன் என நிக்சன் பேசியதை கண்டித்த கமல்ஹாசன், தௌலத் என தினேஷ் பேசும்போது வடசென்னை பாஷை என பிராண்ட் பண்ணுறீங்களா என கேட்டிருந்தார்.

பூர்ணிமா, மாயாவை கண்டிக்காதது ஏன்?

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும்போதே நடிகர் கமல்ஹாசன் டபுள் ஆக்சன் கொடுப்பது போல நடித்து இருந்த நிலையில், ஒரு கமல்ஹாசன் வடசென்னை பாஷை பேசுவது போல பேசி நடித்திருந்தார். நீங்க மட்டும் அப்படி பிராண்ட் பண்ணலாமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.

மேலும், நிக்சன், அர்ச்சனா, தினேஷ், மணிகண்டன் உள்ளிட்டோரை கண்டித்த கமல்ஹாசன் வழக்கம்போல இந்த வாரமும் மாயா மற்றும் பூர்ணிமாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது ஏன் என்கிற கேள்வியை எழுப்புகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து மாயாவும் பூர்ணிமாவும் ரூல்ஸ் மீறுவது மட்டுமின்றி, ஆபாச வார்த்தைகளை தொடர்ந்து பேசி வருகின்றனர். கெட்ட வார்த்தையை பேசியதாக பூர்ணிமாவே ஒத்துக்கொண்ட நிலையில், அவருக்கு எந்த ஒரு வார்னிங்கும் கொடுக்காதது ஏன்? என்றும் இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உங்களுக்குத் தகுதி இல்லை என்றும் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.