நான் மட்டும் தான் இந்த உலகத்திலேயே ஹானஸ்ட்!.. வனிதா விஜயகுமார் போட்ட பதிலடி போஸ்ட்!..

நான் மட்டும் நேர்மையானவள்

வனிதா விஜயகுமார் அண்மையில் தனக்கு நடந்த தாக்குதல் குறித்து பேசிய நிலையில் தற்போது அவர் மட்டும் தான் உலகத்திலேயே நேர்மையானவர் என்றும் கூறியுள்ளார். வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போடியளர்களுள் ஒருவர் ஆவார். வந்த ஒரு வாரத்திலேயே வனிதாவின் மகள் என நிரூபித்து விட்டார்.

அடிப்படையான படிப்பின் முக்கியத்துவதைக் கூட புரியாமலும், வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்பது கூட தெறியாமலும் வளர்த்துள்ளார் வனிதா என ஜோவிகாவின் நடவடிக்கையை வைத்து வனிதாவுக்கும் வெளியே திட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த வாரம் ஜோவிகா வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் விக்ரம் தான் எவிக்ட் ஆகப் போகிறார் என தகவல்களும் வெளியானதும் அதற்கும் வனிதா தான் காரணம் என ட்ரோல்கள் குவிந்து வந்தன. இந்நிலையில், இப்படியொரு ட்வீட்டை போட்டிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் 7 ஆவது சீசன் நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய்குமார் மகளான வனிதா விஜயகுமார் பிரபல யூடியூப் சேனலில் விமர்சனம் செய்து வருகிறார்.

முகம் வீங்கிய வனிதா

அதை தொடர்ந்து பிரதீப்பின் ரெட் கார்டு தொடர்பாக கமலுக்கு ஆதரவாக பேசினார் வனிதா விஜயகுமார். இந்நிலையில், இதனை காரணம் கொண்டு மர்ம நபர் ஒருவர் வனிதா மீது தாக்குதல் நடத்தினார். மேலும் இந்த சம்பவம் குறித்து வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவில் அடிவாங்கிய முகத்துடன் போட்டோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில், இந்த உலகில் நமக்கு எற்பட்டதை நாம் வெளிபடையாக சொன்னால் தான் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள். மனதளவில் பெண்கள் ஆண்களைவிட பலசாலி, ஆனால் உடலளவில் ஆண்கள் தான் பலசாலி. அரசியல்வாதிக்கோ அல்லது திரைத்துறையினருக்கோ முகம் என்பது மிகவும் அவசியமான ஒன்று அதை வெளியே காண்பிக்க கூடாது என்பதற்காக இப்படி செய்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

கஸ்தூரிக்கு பதிலடி

மேலும் அவர், உடனடியாக தாக்குதளை பதிவிட்டதற்கு காரணம் , அதை பொய் என்றும் செட்டப் என்றும் கூறுவார்கள், மக்கள் மட்டுமல்ல என் குடும்பத்தினரே நம்பமாட்டார்கள் எனக் கூறினார்.

வனிதா பிரதீப் ரசிகர் என குறிப்பிட்ட நிலையில், சனம் ஷெட்டியை தொடர்ந்து கஸ்தூரியும் யாரோ அடித்ததற்கு பிரதீப் எப்படி காரணமாக முடியும், அவர் அளித்த விமர்சனத்தால் வந்த வினை, போலீசுக்கும் போகமாட்டார், வனிதாவின் பொய் கதை யூடியூபுக்கும் விஜய் டிவிக்கும் வேண்டுமானால் கன்டென்ட்டுக்கு பயன்படுத்தலாம் ஆனால் போலீசிடம் வியாபாரம் ஆகாது என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலலிக்கும் வகையில் வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ஒரு திறந்த புத்தகம். உலகத்தில் என்னைபோன்ற நேர்மையான ஒருவர் கிடையவே கிடையாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” எனக் குறிபிட்டிருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.