தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகராகத் திகழ்ந்தவர் திருச்சி லோகநாதன். வாராய்.. நீ.. வாராய்.. போகும் இடம் வெகு தூரமில்லை.. என்ற காலத்தால் அழியாத காவியப் பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ‘ஆசையே அலைபோலே..‘ ‘கல்யாண சமையல் சாதம்…‘ ‘அடிக்கிற கைதான் அணைக்கும்…‘ ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்…‘ போன்ற பல கிளாசிக் ஹிட் பாடல்களைக் பாடிய குரலுக்குச் சொந்தக்காரர். டி.எம்.சௌந்தர் ராஜனை சினிமா உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்.

இவரது வழி வந்தவர்கள்தான் இவர்களது புதல்வர்களான டி.எல்.மகாராசன், தீபன் சக்கரவர்த்தி. தனது தந்தையைப் போலவே இசை உலகில் பல ஹிட் பாடல்களைப் பாடியவர்கள். இவற்றில் டி.எல். மகாராஜனைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

மறுபடியும் லுங்கியா.. ஆளை விடுங்க.. கும்பிடு போட்ட கார்த்திக்கு ‘பையா‘ கதையைச் செதுக்கிய லிங்குசாமி

பெரிய லிஜண்டின் மகனான இவர் முறைப்படி சங்கீதம் கற்றுத் தேர்ந்து தனது 12-ஆவது வயதிலேயே திருவருட்செல்வர் படத்தில் முதன் முறையாக கே.வி.மகாதேவன் இசையில் டி.எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து ‘காதலாகிக் கசிந்து‘ என்ற பாடல் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொர்ந்து பக்தி மணம் கமழும் பலபாடல்களைப் பாடினார். இவரின் குரலில் ஏராளமான பக்தி ஆல்பங்கள் வந்துள்ளன.

விநாயக் கடவுளின் புகழ்பெற்ற பக்தி பாடலான ‘ஒன்பது கோளும் ஒன்றாய் காண..‘ இவரது கணீர் குரலில் இன்றும் பல கோவில்களில் தினந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கும் இனிய கானமாகும். பக்திப் பாடல்களால் புகழ் பெற்ற டி.எல்.மகாராசன் ஏராளமான சினிமாப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்,வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில், அந்திமழை மேகம் (நாயகன்), மச்சினிச்சி வந்த நேரம் (பூவே உனக்காக), ‘காதல் யோகி..‘ (தாளம்), பக் பக் பக் ஹே மாடப்புறா (பார்த்திபன் கனவு), ஹே சம்பா ஹே சம்பா (பாண்டவர் பூமி) போன்ற பல புகழ்பெற்ற ஹிட் பாடலைப் பாடி திரைத்துறையிலும் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ளார்.

இவரது சகோதரரான தீபன் சக்கரவர்த்தயும் பூங்கதவே தாழ் திறவாய் (நிழல்கள்), அரும்பாகி மொட்டாகி பூவாகி போன்ற பல புகழ் பெற்ற ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். மொத்தத்தில் தந்தை திருச்சி லோகநாதனைப் போலவே புதல்வர்களும் சினிமா உலகில் புகழ்பெற்ற பாடகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...