மறுபடியும் லுங்கியா.. ஆளை விடுங்க.. கும்பிடு போட்ட கார்த்திக்கு ‘பையா‘ கதையைச் செதுக்கிய லிங்குசாமி

தனது முதல் படத்திலேயே இப்படி  ஒரு புகழை எந்தவொரு நடிகரும் அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் அது கார்த்திக்குக் கிடைத்தது. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சினிமா கற்றுக் கொண்டிருந்தவரை அமீர் பருத்திவீரன் படத்தில் இழுத்து வந்து புழுதிக்காட்டில் விட்டு நடி என்று கூறினார். ஆனால் கார்த்தியோ அதில் நடிக்காமல் வாழ்ந்தார். அந்த அளவிற்கு இந்தப் படம்தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு புதுமுக நடிகர் கிட்டத்தட்ட 50 படங்கள் தாண்டி கொடுக்கும் நடிப்பை தனது ஒரே படத்தில் மொத்தமாக இறக்கி வைத்தார் கார்த்தி. அதற்குக் காரணம் இயக்குநர் அமீர். படத்தில் கார்த்தி ஒரு கசங்கிய சட்டையும், ஏற்றி மடித்துக் கட்டிய லுங்கியுமாக படம் முழுக்க பருத்திவீரனாக கலக்கியிருப்பார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்கு அடுத்து வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்திலும் பருத்தி வீரனைப் போல் அழுக்குச் சட்டையில் நடித்திருப்பார். இந்தப் படம் அப்போது கொண்டாடப் படவிட்டாலும் இன்று கொண்டாடப்படுகிறது. தனது முதல் இரண்டு படங்களிலேயே சினிமாவின் சூட்சமத்தை அறிந்து வைத்திருந்த கார்த்திக்கு மூன்றாவதாக வந்த படம் பையா.

அஜீத் உடல்நிலை குறித்த உண்மை நிலவரம் இதான்… வதந்தியை நம்பாதீங்க.. PRO சுரேஷ் சந்திரா தகவல்

லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்காக கார்த்திக்கு கதைசொல்லப் போயிருக்கிறார் லிங்குசாமி. அப்போது கார்த்தி ஆயிரத்தில் ஒருவன் ஷுட்டிங்கில் இருந்திருக்கிறார்.

தனது முந்தைய படங்களைப் போலவே பையா படத்திலும் லுங்கி, அழுக்குச் சட்டை என லிங்குசாமி ஹீரோவினைப் பற்றிச் சொல்ல கார்த்தி லிங்குசாமியிடம், “சார் தயவு செஞ்சு வேணாம் சார்.. ஏற்கனே இந்த ரெண்டு படத்திலும் அழுக்காவே நடிச்சுட்டேன். அடுத்த படமாவது கொஞ்சம் ஸ்டைலா இருக்கட்டும் சார்“ என்று கேட்க இயக்குநர் லிங்குசாமி மீண்டும் கார்த்திக்காக கதையில் சிறிய மாற்றங்களைச் செய்து அவரை ஸ்டைலான ஹீரோவாக மாற்றியிருக்கிறார்.

மேலும் படம் முழுக்க கார்த்தியும், தமன்னாவுமே அதிகம் வருவதால் ஸ்டைலாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணி கார்த்தி சொல்ல லிங்குசாமி அதைச் செய்திருக்கிறார். இல்லையெனில் மீண்டும் கார்த்தி அதே பார்முலாவில் நடித்திருப்பார்.

பையா படமும் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் கார்த்தி வேட்டி சட்டையில் கொம்பன், விருமன், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.