தனுஷே அடி வாங்கி இருக்காரு! பிரபல இயக்குனரின் அடாவடித்தனத்தை அம்பலமாக்கிய நடிகர்!

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தற்போது திகழ்ந்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்து தனது சினிமா பயணத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறார் தனுஷ்.

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் தனுஷும் ஒருவர். தற்போது தனுஷ் அவருடைய ஐம்பதாவது படத்தை இயக்கி அதில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ராயன் என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் ஒரு பிளேபாயாக லவ்வர் பாயாக கதாபாத்திரங்களில் நடித்து வந்த தனுஷ் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் ஒரு நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

அவருடைய நடிப்பின் இந்த பரிணாமத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவருடைய அண்ணனும் இயக்குனருமான செல்வராகவனும் ஒரு காரணம். தன் அண்ணன் செல்வராகவன் மீது தனுஷுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. எந்த நேரத்திலும் தன் அண்ணனை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காமல் பேசக்கூடிய ஒரு தம்பியாகவே இன்றளவும் இருந்து வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் செல்வராகவன் பற்றிய ஒரு சீக்ரெட்டை பகிர்ந்து இருக்கிறார். அதாவது செல்வராகவன் இயக்குனராக பணிபுரியும் படங்களில் அவருக்கு உதவியாளராக இருப்பவர்களிடம் மிகவும் அடாவடித்தனமாக நடந்து கொள்வாராம். அதாவது அவர்களை அடிப்பது கெட்ட வார்த்தைகளில் பேசுவது என அவரின் போக்கு இப்படித்தான் இருக்குமாம்.

மேலும் முதல் நாள் இரவு ஒரு காட்சியை சொல்லிவிட்டு மறுநாள் வேறொரு காட்சியை எடுப்பாராம். இதற்கிடையில் அசிஸ்டன்ட் இயக்குனர்கள் முதல் நாள் சொல்லிய காட்சிகளுக்கு தேவையான ஆடைகளைத்தான் ரெடியாக வைத்திருப்பார்களாம். ஆனால் மறுநாள் அவர் வேறு ஒரு காட்சியை படமாக்கும் பட்சத்தில் அதற்கான ஆடைகள் தயாராக இருக்காது. அதற்கும் கோபப்படுவாராம்.

ஏன் தனுசே இவரிடம் பலமுறை அடிவாங்கி இருக்கிறாராம். தம்பி என்று கூட பார்க்க மாட்டாராம். அவருக்கு தேவையான நடிப்பு வரும் வரை அடித்து தான் சொல்லிக் கொடுப்பாராம். அது மட்டுமல்லாமல் ஏ எம் ரத்தினத்தின் மகனும் நடிகருமான ரவி கிருஷ்ணாவையும் இந்த அளவுக்குத் தான் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தாராம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...