எதிர்பார்த்தது பிடிஆர், நீக்கப்பட்டதோ நாசர்.. மேலும் ஒரு இளைஞருக்கு அமைச்சர் பதவி.. முதல்வர் அதிரடி..!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என ஏற்கனவே கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருந்த நிலையில் நேற்று அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதாகவும் டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.

திமுக வட்டாரங்களில் இருந்து வெளியான செய்திகளின்படி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் டிஆர் பாலுவின் மகன் டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது என்பதும் இன்று டிஆர்பி ராஜா நான் புதிய அமைச்சராக பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

trb raja

இந்த நிலையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என்றும் அது குறித்த அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த அறிவிப்பில் நிதி அமைச்சர் ஆக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்படும் என்றும் அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து இல்லை என்றாலும் அவருக்கு நிதி அமைச்சர் பதவி தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்விக்குறி தான் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகிய இளைஞர்கள் அமைச்சரவையில் இருக்கும் நிலையில் தற்போது டிஆர்பி ராஜா என்ற இளைஞரும் அமைச்சர் பதவியை ஏற்க இருப்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இன்னும் அமைச்சரவையில் என்னென்ன மாற்றம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டிஆர்பி ராஜா, அமைச்சர், நாசர்,

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews