டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படமா? அந்தக் காலத்துல இவர் இல்லாத படமே இல்ல..!

தற்போது சினிமாவில் பான் இந்தியா படங்களும், மல்டி ஸ்டார் படங்களும் வெளிவரும் வேளையில் 1960-களில் வந்த சினிமாவிலேயே டபுள் ஹீரோ கதைகளில் அதிகம் நடித்தவர் யாரென்றால் முத்துராமன் தான். நவரசத்திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட முத்துராமன் ஸ்ரீதர், கே.பாலசந்தர் ஆகியோரின் படங்களில் அதிகம் நடித்திருப்பார்.

அப்பா வேஷம் போட்டுக் கொண்டு.. முழு படத்தையும் தாடியில் தாங்கிய “காதலிக்க நேரமில்லை” முத்துராமன் திரை வாழ்வில் மகுடம். “காதலிக்க நேரமில்லை… காதலிப்பார் யாருமில்லை… வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை” காஞ்சனாவை தாத்தா வேஷத்தில் கலாய்த்து பாடும்… “நவரசத் திலகம்” முத்துராமனை காலத்துக்கும் ரசிக்கலாம்.

நடுத்தர வர்க்கத்தின் நாயகன் என்று கூட இவரைச் சொல்லலாம்.  நமது பக்கத்து வீட்டு மனிதரைப் போல் இருக்கும் முத்துராமன் நடிப்பில் இலகுவாக கண்களாலும்.. குரலாலும்.. சூழ்ந்த உடல் மொழி கொண்டு மிக அற்புதமாய் தன்னை எந்த கதாபாத்திரத்துக்கும் பொருத்திக் கொள்வார். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

“எதிர் நீச்சல்” படத்தில்… நாகேஷ் கதை நாயகனாக நடிக்க நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.  சக நடிகனுக்கு இடம் விட்டு தன் இடத்தில் சதம் அடிக்கும் கலை வாய்த்தவர். திரையில் இவர் தோன்றினாலே ஒரு வகை உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.

Muthuraman

தன் மரணத்துக்கு பின் தன் மனைவி அவளின் முன்னாள் காதலன் கல்யாண் குமாரோடு சேர்ந்து தீர்க்க சுமங்கலியாய் மீண்டும் அவள் வாழ்வை தொடர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட கணவனாக முத்துராமன் நடித்த நெஞ்சில் ஓர் ஆலயம் படம் என்றென்றும் மனதில் நிற்கும் காதல் காவியம். ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..’ என்ற வாழ்க்கைத் தத்துவப் பாடலில் இவர் காட்டும் முக பாவனைகள் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சொல்லாமல் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் செஞ்ச தரமான சம்பவம்.. பொன்மனச் செம்மல் பட்டம்னா சும்மாவா?

இப்பொழுதும் அர்ஜுனன் என்றால் ‘கர்ணன்’… படத்தில் அர்ஜுனனாக வந்த முத்துராமன் தான் நினைவுக்கு வருவார். நடிகர் திலகத்தோடும், புரட்சித்தலைவரோடும் இவர் நடித்த படங்கள் ஏராளம்.

பெண் பாத்திரங்கள் முன்னிலை வகிக்கும் படங்களில் கூட தன்னை அழகாகவே முத்துராமன் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் அவர் சரியாகவே பயன்படுத்திக் கொண்டார் என்பதும் சினிமா அரசியலில் அவர் கற்றுக் கொண்ட பாடமாகக் கூட இருக்கலாம். பெரும்பாலும் இரண்டு நாயகர்களில் ஒருவராகவே தான் அவரின் வெற்றி தீர்மானிக்கப் பட்டது சினிமாவின் விதியா என்று தெரியவில்லை.

இவரது வழி வந்த நவரச நாயகன் கார்த்திக்கும், கௌதம் கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு ஜொலிக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...