நள்ளிரவு என பார்க்காமல் இசையமைப்பாளர் டி. இமானிற்க்கு கால் செய்த தளபதி விஜய்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படங்களின் வெற்றிக்கும் பக்கபலமாக இருந்து வருவது படங்களில் அமையும் பாடல்கள் தான். திரைப்படங்களில் பாடலுக்கு என தனி சிறப்பான இடம் உள்ளது. ஹீரோ அறிமுக பாடல் முதல், காதல் காட்சிகள் இடம் பெறும் ரொமான்ஸ் பாடல்கள் வரை பலதரப்பட்ட இசை ரசிகர்களையும் தன் வசம் இழுப்பது படத்தின் இசையமைப்பாளரின் பொறுப்பு தான். அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை விட முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் ஒரு படத்திற்காக 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் சமீபத்தில் தகவல் கிடைத்திருந்தது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க இசையின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் டி இமான். இவரின் பாடல்கள் நகரங்களில் தொடங்கி கிராமங்களில் வரை பட்டையை கிளப்பி வருகிறது.

அதிலும் சமீபத்தில் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றிப் படங்கள் ஆன மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை என இந்த திரைப்படங்களுக்கெல்லாம் இசையமைத்த இமானின் ஒவ்வொரு பாடல்களும் தெறிக்க விடும் அளவில் அமைந்திருக்கும்.

இப்படி இருக்க தளபதி விஜய் ரசிகர்களுக்கும் இமானின் இசை மிகப்பெரியது தான். இமான் முதல் முதலில் இசையமைப்பாளராக திரையில் அறிமுகமானது தளபதி விஜய் அவர்களின் திரைப்படத்தில் தான். தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் டி இமான் இசையமைத்திருப்பார். இந்தப் படத்தின் பாடல்கள் அனைவருக்கும் பிடித்தமான விதத்தில் அமைந்திருக்கும். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின் தளபதி விஜய் நடிப்பில் ஜில்லா படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அமைந்த எல்லா பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கும். அதிலும் குறிப்பாக கண்டாங்கி கண்டாங்கி எனும் பாடலை தளபதி விஜய் அவர்கள் தனது சொந்த குரலில் பாடி இருப்பார். தற்பொழுது இந்த பாடல் குறித்த ஒரு ரகசிய அப்டேட் கிடைத்துள்ளது.

தளபதி விஜய் ஜில்லா படத்தில் அமைந்த கண்டாங்கி கண்டாங்கி சேலை இந்த பாடலை பாடிவிட்டு வீடு திரும்பி உள்ளார். ஆனால் அவருக்கு அந்தப் பாடல் பாடிய முழு திருப்தி ஏற்படவில்லை. உடனே நள்ளிரவு என பார்க்காமல் டி இமானுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இந்த பாடல் உங்களுக்கு முழு திருப்தியாக இருந்தால் மட்டும் வெளியிட வேண்டும், இல்லையென்றால் வேறு பாடகர்களை வைத்து பாடிக் கொள்ளலாம் என தனது மன கருத்துக்களை குழப்பத்துடன் கூறியுள்ளார்.

தளபதி 68 படத்தில் இணைந்த அஜித் பட ஹீரோயின்! அதுவும் அவருக்கு ஜோடியாகவா?

அதற்கு இசையமைப்பாளர் இமான் இந்த பாடல் மிகச் சிறப்பாக ரெக்கார்டிங் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தங்களது குரலில் இந்த பாடல் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது எனக் கூறி நீங்கள் இதுவரை குத்துப் பாடல்கள் மட்டுமே பாடி வந்த நிலையில் இந்த மெலோடி பாடல் மக்களிடம் நீங்காத இடத்தை பெறும் எனக் கூறியுள்ளார்.

அதற்கு ஏற்றார் போல் தளபதி குரலில் வெளியான கண்டாங்கி கண்டாங்கி சேலை இன்றளவும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் மீண்டும் இணையாதே மக்கள் மனதில் ஒரு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...