துலாம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. துலாம் ராசி அன்பர்களே! யோககாரகன் ராகு பகவான் பெயர்ச்சிக்குப் பின்னர் 7 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து இட அமர்வு செய்கிறார். கேது பகவான் உங்கள் ராசியில் இருந்து 12 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சனி பகவான் 5 ஆம் இடத்தில் உள்ளார்.

6 மற்றும் 12 ஆம் இடங்களில் ராகு – கேது பகவான் இட அமர்வு செய்கின்றனர். மறைவு ஸ்தானத்திற்கு ராகு- கேது பகவான் செல்வதால் கடந்த காலங்களில் சந்தித்த இன்னல்களில் இருந்து மீள்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மனதிற்கு நிம்மதியினைக் கொடுக்கும். கெட்ட நபர்கள் உங்களைவிட்டு விலகுவர். துன்பம், தரித்திரம் உங்களை விட்டுச் செல்கின்றது. இவ்வளவு காலம் கழித்து கிரகங்களின் இட அமைவு சாதகமாக உள்ளது.

மிகவும் கடினமான போராட்டங்களை எதிர்கொள்ளும் போது ராகு உங்களுக்கு துணை நின்று உங்கள் காரியத்தினை நிறைவேற்றிக் கொடுப்பார். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்கிறார்; எதிர்த்துப் போராடும் கடினமான விஷயங்களில் உங்களுக்கு வெற்றியினைக் கொடுக்கிறார்.

கேது பகவான் மன நிம்மதியினைக் கொடுக்கிறார்; உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். காதலர்கள் மத்தியில் இருந்த மனக் கசப்புகள் குறையும்; குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இடையேயான கசப்புகள் குறையும், கசப்பான அனுபவங்கள் மறையும்.

திருமண காரியங்கள் தள்ளிப் போன நிலையில் தற்போது திருமணம் கைகூடும்; மாணவர்களைப் பொறுத்தவரை தெளிவான சிந்தனையுடன் இருப்பர்; மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவார்கள்.

வெளிநாடு செல்லும் யோகங்கள் அமையப் பெறும், வேலை சார்ந்து இட மாற்றம், பணி மாற்றம் போன்றவை நடக்கப் பெறும். அதிகார யோகம் கிடைக்கும். துலாம் ராசியினைப் பொறுத்தவரை வேலை சார்ந்த முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழிலில் இருந்த எதிரிகள் நண்பர்கள் ஆவர். பொருளாதார மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டம், யோகம் போன்றவை கிடைக்கும். இடையூறுகள் விலகும் காலமாக இது உங்களுக்கு இருக்கும்.

உங்கள் வாழ்க்கையினை நீங்கள் நினைத்தது போல் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews