துலாம் நவம்பர் மாத ராசி பலன் 2023!

நவம்பர் மாதத்தில் சுக்கிரன் நீச்சமடைகிறார், சனி பகவான் 5 ஆம் இடத்தில் உங்களுக்குச் சாதகமாக உள்ளார். குரு பகவான் தெளிவான பார்வையுடன் உள்ளார். ராகு- கேது பெயர்ச்சியானது அனைத்துத் தடைகளையும் தவிடு பொடியாக்குகின்றது.

உங்கள் ராசியிலேயே தான் புதன் பகவான் உள்ளார். மேலும் புதன் பகவானுடன் செவ்வாய் பகவான்- சூர்ய பகவான் கூட்டணி அமைத்துள்ளனர். மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் சிறந்து விளங்குவர்; உயர்கல்விக்கான முக்கியத் தேர்வுகளில் வெற்றியும் பெறுவர். உயர் கல்வி சார்ந்த திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தலாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புதுத் தொழிலுக்கு முயற்சிப்போர் தயங்காமல் முயற்சிக்கலாம். மேலும் வீடு, மனை வாங்க பல ஆண்டுகளாக கனவு கண்டு இருந்தவர்களுக்கு அவர்களின் கனவு நனவாகும் காலகட்டமாக இருக்கும்.

மேலும் தங்கநகை, மனை சார்ந்த முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.  வெளிநாடு செல்ல முயற்சி செய்து வந்தவர்களுக்கு நற் செய்தி தேடிவரும். தொழில் சார்ந்த முதலீடுகளைச் செய்து பெரிய அளவில் மாற்றத்தினைக் காண்பீர்கள். மேலும் இருக்கும் தொழிலுடன் பலரும் மற்றுமொரு புதுத் தொழிலைச் செய்வீர்கள்.

ஆனால் நீங்கள் உங்களுக்காக எந்தவொரு விஷயத்தினையும் செய்யாமல் மற்றவர்களின் நன்மை கருதி செய்தால் வெற்றி நிச்சயம். நீச்சமடைந்த சுக்கிரன் உங்கள் வாழ்க்கைத் துணைக்காகவோ, குழந்தைகளுக்காகவோ அல்லது நண்பர்களுக்காகவோ செய்யும் விஷயங்களில் உங்களுக்குச் சாதகத்தினை ஏற்படுத்துவார்.

கடமைக்காகச் செய்யும் விஷயங்களைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறிதளவு உடல் தொந்தரவு இருக்கும். ஆனால் கடந்த காலங்களில் இருந்த அளவில் பெரும் தொந்தரவுகள் எதுவும் இருக்காது.

இதுவரை நடக்கவில்லையே என்று வருந்திய விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும். புதன் பகவான் உங்களை நெருங்கி இருப்பதால் மிகவும் தெளிவான சிந்தனையுடன் இருப்பீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உங்களுக்காக வாழும் மாதம் நவம்பர் மாதம் என்றில்லாமல் உங்களைச் சார்ந்து உள்ளவர்களுக்காக வாழும் மாதம் நவம்பர் மாதம் என்றால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews