துலாம் மார்கழி மாத ராசி பலன் 2023!

துலாம் ராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும். பெருமாள் மற்றும் விநாயகர் வழிபாடு செய்து வாருங்கள். அருகில் உள்ள விநாயகர் அல்லது பெருமாள் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை சென்று வந்தால் உங்களுக்கு சகலவித அனுகூலங்கள் ஏற்படும்.

தேக ஆரோக்கியத்தில் மிகச் சிறந்த மாற்றங்களைக் காண்பீர்கள். ஆனால் கடந்த காலங்களில் இருந்த பெரும் உடல் தொந்தரவுகளுக்குத் தீர்வும் கிட்டும் காலமாகவும் மார்கழி மாதம் இருக்கும்.

எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும், எடுத்த காரியங்களைச் செய்து முடித்து வெற்றியினைப் பெறுவீர்கள். வேலைரீதியாக இருந்துவந்த சிக்கல்கள் தீரும், வேலை செய்யும் இடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.

இவ்வளவு நாள் நீங்கள் அரும்பாடுபட்டு செய்த வேலைக்கான வெகுமதியும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறும். பலருக்கும் எதிர்பாராத பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப் பெறும்.

வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறும். எதிரிகள் இருந்துவந்த பதட்டம் உங்களிடத்துக் குறையும்; மேலும் எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிவர்.

கடந்த காலங்களில் சுப காரியங்களில் இழுபறிகள், தடைகள், முட்டுக் கட்டைகள் என இருந்து உங்களுக்குப் பெரும் மன சங்கடத்தினை ஏற்படுத்தி இருக்கும்.

ஆனால் தற்போது சுப காரியங்களில் இருந்த பாதிப்புகள் பனிபோல் விலகி உங்களின் பாதை மிகத் தெளிவானதாக இருக்கும். பொருளாதார ரீதியாக பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அசையும், அசையாச் சொத்துகள் ரீதியாக முதலீடுகளைச் செய்வீர்கள். வியாபாரத்தில் செய்யும் புதுவிதமான முயற்சிகள் வெற்றியினைக் கொடுக்கும். கூட்டுத் தொழில் செய்து வந்தோர் தனியாக முதலீடு செய்து தனிப்பட்ட ரீதியில் தொழில் துவங்கும் முயற்சியில் களம் இறங்குவர்.

தாய்வழி உறவினர்களுடனும், உடன் பிறப்புகளுடனும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், மனக் கசப்புகள் ஏற்படும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.