துலாம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

துலாம் ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் ஆட்சி பெற்ற சுக்கிரனாக இட அமர்வு செய்கின்றார்.

பொதுவாகவே நீங்கள் சுக்கிர பகவானின் ஆதிக்கம் பெற்று இருப்பதால் நீங்கள் வலுவானவராகவும், அறிவுமிக்கவராகவும் விவேகமானவராகவும் இருப்பீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சுக்கிர பகவான் மூல திரிகோண அமைவில் இட அமர்வு செய்துள்ளார். பொருளாதார ரீதியாக சிறந்து விளங்குவீர்கள். உங்களின் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். கடந்த காலங்களில் அனுபவித்து வந்த பல பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் காலகட்டமாக இருக்கும்.

உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் மாதமாக டிசம்பர் மாதம் இருக்கும். பல ஆண்டுகளாக வீடு வாங்க நினைத்து இருந்தோர் அட்வான்ஸ் தொகை கொடுத்து வீட்டினை உறுதி செய்வீர்கள்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த வேலையானது கிடைக்கப் பெறும். சூர்யன்- செவ்வாய் பகவான் இணைந்து தன ஸ்தானத்தில் இட அமைவு செய்துள்ளனர்.

எதிர்காலத் திட்டங்கள் சார்ந்து உங்களுக்குப் பணத் தேவை அதிகமாக இருக்கும்; பல வகைகளிலும் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் எதிர்பார்த்த நேரத்தில் பண உதவி கிடைக்கப் பெறும்.

குரு பகவானின் பார்வை சுக்கிர பகவான் மீது விழுகின்றது. நீங்கள் தொட்ட காரியம் மட்டுமல்லாது தொடாத காரியங்களும் துலங்கும். அதிர்ஷ்ட மழையில் நனைவீர்கள் என்றே சொல்லலாம். பல ஆண்டு போராட்ட கால வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

நல்ல காரியங்களை 6, 16, 26 ஆகிய தேதிகளில் செய்யுங்கள். மற்ற கிரகங்கள் என்று கொண்டால் புதன் பகவான் 3 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

புதன் பகவானின் இட அமைவு உங்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும். புதன் பகவானின் ஆசியால் மிகவும் அறிவார்ந்த திட்டங்களைப் பக்குவமாகத் தீட்டி அதனை சிறப்பாக செயல்படுத்தவும் செய்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்கள் கல்விரீதியாக மிகவும் ஆர்வத்துடன் படிப்பர்; உயர் கல்வி சார்ந்த தேர்வுகளிலும், போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவர். திருமண காரியங்கள் என்று பார்க்கையில் எதிர்பார்த்தது போல் வரன் அமையப் பெறும். டிசம்பர் மாதம் உங்களுக்கு குதூகலமான மாதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.