துலாம் ஆடி மாத ராசி பலன் 2023!

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

துலாம் ராசி அன்பர்களே! இந்த மாதம் பல மாற்றங்களைக் கொடுக்கும் மாதமாக இருக்கும். தசம ஸ்தானத்தில் இருந்த சுக்கிரன் பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்துக்குப் பெயர்ந்துள்ளார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

புதன் பகவானின் அனுகிரகத்தால் அரசு வேலைக்குக் காத்திருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்; வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் மாதமாக இருக்கும். மேலும் நீங்கள் எதிர்பார்த்த வேலை மாற்றம் நடக்கும்.

நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கப் பெறும். மூத்த சகோதரர்களின் உதவிகள் கிடைக்கப் பெறும். திடீர் யோகம் ஏற்படும் மாதமாக இருக்கும்.

வார்த்தைகளில் கவனம் தேவை; தேவையற்ற பேச்சுகளால் அவப் பெயர் ஏற்படும். மூன்றாம் இடத்திற்கு குரு பார்வை ஏற்படுவதால் நண்பர்களின் உதவிகள் கிடைக்கப்பெறும்.

திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கப் பெறும். உடல் நலன் என்று எடுத்துக் கொண்டால் எந்தவொரு பாதிப்பும் இல்லை.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

நண்பர்களால் உங்களுக்கு ஆதாயப் பலன்கள் ஏற்படும். வியாபாரம் ரீதியாக சிறு சிறு தடுமாற்றம் ஏற்படும். எந்தவொரு விஷயத்தினையும் முன் ஆலோசனை செய்து செயல்படுதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews