சினிமாவில் வருவதற்கு முன் சீரியலில் நடித்த டாப் ஹீரோக்கள்! திருமதி செல்வத்தில் நடிச்சது இவரா?

தமிழ் சினிமாவில் இன்று டாப் ஹீரோக்களாக இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் எப்படியாவது ஹீரோவாக வேண்டுமென்ற ஆசையில் தான் வந்திருப்பார்கள். அதில் ஒரு சில பேர் மட்டுமே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு ஹீரோ வாய்ப்பை கூட பெற்று இருக்கலாம். அதற்கு ஒரு உதாரணமாக நடிகர் சூரியை குறிப்பிடலாம். ஆரம்பத்தில் காமெடி நடிகராக வலம் வந்த சூரி விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக ஒரு புது அவதாரம் எடுத்தார்.

அந்தப் படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்தடுத்த படங்களிலும் அவர் ஹீரோவாகவே ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் கோலிவுட்டில் இன்று மாஸ் ஹீரோக்களாக இருக்கும் விக்ரம், விஜய் சேதுபதி ஆகியோர் ஆரம்பத்தில் சீரியல்களில் தான் நடித்து வந்தார்கள். அது மட்டுமல்ல நடிகர் விமல், சூரி உட்பட ஒரு சில நடிகர்களும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் தான்.

அதிலும் குறிப்பாக ‘திருமதி செல்வம்’ என்ற சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சீரியல் ஆகும். அதில் சஞ்சீவ் லீட் ரோலில் நடித்திருப்பார். அதே தொடரில் நடிகர் சூரியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ‘சித்தி’ என்ற மாபெரும் வெற்றி தொடரில் நடிகர் விமலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதிலிருந்து தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘கலாட்டா குடும்பம்’ என்ற சீரியலை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. மிகவும் நகைச்சுவையான சின்னத்திரை தொடராகும். அந்த சீரியலில் நடிகர் விக்ரம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதேபோல் ‘பெண்’ என்ற சீரியல் நீண்ட ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடராகும். அந்த சீரியலில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி பல பிரபலங்கள் சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் இருந்து வந்திருக்கிறார்கள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...