பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் கட்டி இருந்த வாட்ச்.. விலையை கேட்டு மிரண்டு போன ரசிகர்கள்..

ஐபிஎல் போட்டி ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அதை பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் சமீபத்தில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது பற்றியும் இதற்கான விமர்சனங்கள் குறித்து ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கொடுத்த விளக்கங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பும் கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலான டாபிக்காக இருந்து வருகிறது.

15 பேர் கொண்ட இந்திய அணி டி 20 உலக கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் சில முக்கியமான வீரர்கள் இடம் பெறாமல் போனது தான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. கே எல் ராகுல் மற்றும் ரிங்கு சிங் உள்ளிட்டோர் டி 20 உலக கோப்பை அணியில் தேர்வாகாத நிலையில் இது பற்றி பேசி இருந்த ரோஹித் ஷர்மா மற்றும் அஜித் அகர்கர், இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஆடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டும் என்பதால் தான் தொடக்க வீரராகவே ஆடிவரும் ராகுலுக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தனர்.

அதே போல ரிங்கு சிங் மீது தவறு எதுவும் இல்லை என்றாலும் இந்திய அணியில் எங்களுக்கு தேவையான காம்பினேஷன் அமைய வேண்டும் என்பதால் தான் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் விளக்கம் கொடுத்தனர். இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருந்த விஷயங்கள் எந்த அளவுக்கு வைரலானதோ அதே அளவுக்கு அவர் கையில் அணிந்திருந்த வாட்ச் பற்றி தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் அணிந்திருந்த வாட்ச்சின் பெயர் Patek Philippe Nautilus Platinum 5711 ஆகும். இந்த வாட்ச் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் மீது இருக்கும் வெள்ளை மற்றும் தங்க நிறம் அதனை இன்னும் அழகாக காட்டுவதற்கு சிறப்பம்சமாக அமைந்துள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் இதில் உள்ள சில டெக்னிக்கலான விஷயங்களும் கூட பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படி ரோஹித் சர்மா அணிந்திருந்த வாட்சில் இதனைத் தாண்டி என்ன சிறப்பம்சம் இருக்கப் போகிறது என பலருக்கும் தோன்றலாம். அதன் விலை தான் தற்போது பலரையுமே ஒரு நிமிடம் வாயை பிளக்க வைத்துள்ளது. இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் இதன் மதிப்பு 58 லட்சம் ரூபாய் தான் இருந்தது.

ஆனால் தற்போது இதன் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ரோஹித் பேசிய விஷயங்களை தாண்டி அவர் அணிந்த வாட்ச் என்ன என்பது வரையும் ரசிகர்கள் தோண்டி எடுத்துள்ள தகவல்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...