ஒரே நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உடன் நடிக்கும் அமிதாப் பச்சன்!.. வேட்டையன் ஸ்டில்ஸ் வைரல்!..

வேட்டையன் படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து நடக்கின்றனர். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

GMp08fyXkAAhJcx

ரஜினிகாந்த் மற்றும் அமிதாபச்சன் அந்தக் காலத்திலேயே இந்தி படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல அமிதாப் பச்சன் மற்றும் கமலஹாசன் இந்தி படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே ஆண்டில் அமிதாப்பச்சன் கமல்ஹாசன் படமும் அமிதாப் பச்சன் ரஜினிகாந்த் படமும் வெளியாகப் போகும் அதிசயம் நடைபெற காத்திருக்கிறது. வரும் ஜூன் மாதம் 27-ஆம் தேதி வெளியாக உள்ள பிரபாஸின் கல்கி படத்தில் அமிதாபச்சன் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்துள்ளனர்.

GMp0 d8XYAAe38U

அதைப்போல அக்டோபர் மாதம் வெளியாக உள்ள வேட்டையன் படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளனர். மும்பையில் நடைபெற்ற வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் சென்றார்.

இந்நிலையில், மும்பையில் அமிதாப் பச்சனுடன் இணைந்து அவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இருவரும் கோட் சூட் அணிந்து கொண்டு செம கெத்தாக போஸ் கொடுத்த போட்டோக்களை லைக்கா நிறுவனம் தற்போது தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இந்தியாவில் கலக்கி வருகின்றனர். இந்த வயதிலும் இருவரும் வசூல் மன்னர்களாக திகழ்ந்து வருவதைப் பார்த்து இந்திய திரை உலகமே ஆச்சரியத்தில் உள்ளது. 81 வயது அமிதாப்பச்சன் 73 வயது ஒரு ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவை வைத்து ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேலுக்கு ரஜினிகாந்த் மட்டுமின்றி ஒரே படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என ஏகப்பட்ட பெரிய நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் உடன் காம்பினேஷன் காட்சிகளில் நடித்து வருவது போல கல்கி படத்தில் கமல்ஹாசன் உடன் அமிதாப் பச்சன் நடித்தாரா? என்பது தெரியவில்லை. இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இந்தளவுக்கு வெளியாகவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...