அதுக்குள்ள ‘ஸ்டார்’ கவின் ‘பிச்சைக்காரன்’ ஆகிட்டாரே!.. நெல்சனை பெக்கரா மாத்தாம இருந்தா சரிதான்!..

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜயை வைத்து பீஸ்ட் மற்றும் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

நெல்சன் தயாரிப்பில் கவின்:

அடுத்ததாக நெல்சன் யாரை இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கவின் நடிக்க உள்ள படத்தை ஃபிலமண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த நெல்சன் தயாரிக்க உள்ளார். அதன் புரோமோஷனல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நெல்சன், கவின், படத்தின் இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கவின் நடிப்பில் அடுத்த வாரம் ஸ்டார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா படம் சரியாகப் போகாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லிப்ட் எனும் படத்தில் கவின் நடித்திருந்தார். ஓடிடியில் படம் வெளியானாலும் கவினுக்கு நல்ல பாராட்டுகளும் ரசிகர்களும் கிடைத்தனர்.

பிளடி பக்கர் புரமோ:

கடந்த ஆண்டு கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ளார். வரும் மே பத்தாம் தேதி ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்தில் அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு பலரும் நிச்சயம் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் பிளடி பக்கர் எனும் படத்தில் கவின் நடிக்க உள்ளார். அந்த படத்துக்காக பிச்சைக்காரர் கெட்டப்பை கவின் போடும் வீடியோ தற்போது காமெடி ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.

நெல்சன் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் நிச்சயம் கவினுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் அனிருத் இசையமைக்கவில்லை என்றாலும் புரமோவை பார்த்து விட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...