மீண்டும் எடுக்கப்பட்ட வசந்த மாளிகை திரைப்படம்! ஹீரோவாக நடித்த பிரபு!

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் வசந்த மாளிகை. இந்த ஒரு படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் ஆனந்த். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் பிரபு நடித்திருந்தார். 1987 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தெலுங்கில் நாகார்ஜுனன் நடிப்பில் வெளியாகியிருந்த மஜ்னு திரைப்படத்தின் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அதாவது தெலுங்கு படத்தின் ரீமேக் படமாக இந்த படம் தமிழில் ஆனந்த் எனும் டைட்டிலில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் பிரபுக்கு ஜோடியாக ராதா நடித்திருப்பார். ஆனால் அந்த காலத்தில் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கும்பொழுது இந்த ஒரு திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜியின் வசந்த மாளிகை திரைப்படத்தை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளதாக நினைத்துக் கொண்டு அதே கோணத்தில் இந்த படத்தை பார்த்து வந்தனர்.

வசந்த மாளிகை படத்தில் காதலன் காதலியை பார்த்து ஏன் இப்படி செய்தாய் என்று சந்தேகத்தோட ஒரு வார்த்தை கேட்பார். அந்த ஒரு வார்த்தை தான் காதலர்கள் இருவருமே பிரியக்கூடிய ஒரு காரணமாக அமையும். அதே மாதிரி இந்த ஆனந்த் திரைப்படத்திலயும் காதலிப்பற்றி வரக்கூடிய ஒரு மொட்டை கடிதத்தை நம்பி காதலன் காதலி மேல் சந்தேகப்படுவார், அதனால் இருவருமே பிரிந்து விடுவார்கள். காதல் பிரிவை மையமாக வைத்து வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படமும் ஆனந்த் திரைப்படமும் ஒன்றாக அமைந்தது ரசிகர்கள் அப்படி நினைப்பதற்கு காரணமாக இருந்துள்ளது.

மேலும் வசந்த மாளிகை திரைப்படத்தில் கதாநாயகனின் பெயர் ஆனந்த் மற்றும் கதாநாயகியின் பெயர் லதா. அதை போல் நடிகர் பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த திரைப்படத்தில் பிரபுவின் பெயர் ஆனந்த் ராதாவின் பெயர் லதா. ஹீரோவின் பெயரை படத்தின் டைட்டிலாகவும் அமைந்திருக்கும். இந்த அளவிற்கு இந்த இரண்டு படங்களுக்கு இடையே அதிகப்படியான ஒற்றுமை இருக்கும் படி இயக்குனர் சிவி ராஜேந்திரன் இயக்கி இருந்தார். இவர் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து பல படங்கள் இயக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்காக பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்டு அந்த பாடல் ஒன்றை பாடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆனந்த படத்தின் மையக்கதை, படத்தில் ஆனந்த கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருப்பார். அவர் ஒரு பாடகர் எங்கு சென்றாலும் அவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். அப்பொழுது ஒரு வேலையாக பிரபு ஒரு ஹோட்டலில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கும். எங்கு சென்றாலும் பிரபுவின் பின் பெண் ரசிகர்கள் கூட்டம் துரத்தி வருவது வழக்கம் ஆனால் அந்த ஹோட்டலில் ரிசப்ஷனில் வேலை பார்த்த ராதா ஹீரோ பிரபுவை பெரிதாக கண்டு கொள்வதில்லை. தன் வேலையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். இந்த ஒரு குணா விஷயம் ஹீரோ பிரபுவிற்கு பிடித்துப் போக அவருக்கு ராதா மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட துவங்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பை பை சொல்லும் கமல்ஹாசன்.. நடுவராக களம் இறங்குகிறாரா நாட்டாமை சரத்குமார்?

அதுக்கப்புறம் சில மோதல்கள், சில சண்டைகள், அடுத்தடுத்து இருவருக்கும் காதல் பிறக்கும், இளமை, துள்ளல், கிண்டல், காதல், சீண்டல் அப்படின்னு சொல்லி முதல் பாதி சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் திடீரென ஒரு மொட்டை கடிதம் வரும் அந்த ஒரு மொட்டை கடிதத்தாலே தூய்மையான காதலில் ஒரு பிரிவு ஏற்படும்.அதன்பின் இருவரும் எப்படி இணைவார்கள் என்பது தான் இந்த படத்தின் மீதி கதையாக அமைந்திருக்கும்.

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருந்தாலும் தமிழில் வெளியான ஆனந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பற்றி சுமாரான வெற்றியை தழுவியது. என்னதான் ஒரு வெற்றி திரைப்படத்தின் கதையை மையமாக வைத்து அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் வெளியாகி இருந்தாலும் நடிகர் பிரபுவிற்கு இது ஒரு சுமாரான வெற்றி படமாகவே அமைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...