இந்தியா முழுவதும் அதிரடியாக சதம் அடிக்கும் தக்காளியின் விலை! காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை கலங்க வைத்துள்ளது. தக்காளியின் தற்காலிக விலை எவ்வளவு, ஏன் இந்த விலையேற்றம் என்பதை இந்த தொகுப்பு விளக்குகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த இந்திய இல்லத்தரசிகளையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது இந்த தக்காளி விலை உயர்வு. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனையான தக்காளியால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். அதனால் விவசாயிகள் அவற்றை சாலையில் வீசி எறிந்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று தக்காளியின் விலை தாறுமாறான விலை ஏற்றம் புதிய உச்சத்தை அடைந்து இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைத்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தின் போது ஜனவரியில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாயாகவும், பிப்ரவரியில் 20 ரூபாயாகவும், மே மாதத்தில் 40 ரூபாயாகவும் படிப்படியாக விலை உயர்ந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளியின் விலை சதம் அடித்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் தக்காளி அதிகம் உற்பத்தியாகும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் சென்ற வாரம் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாகவே 100 ரூபாயை தொட்டது. அதிகரித்த வெப்பம், பருவம் தப்பி பெய்த மழை, தாமதமான விவசாய பணி, உற்பத்தி குறைவு, திடீரெனப் பொழிந்த கனமழை ஆகியவை நாடு முழுவதும் தக்காளி விலை உயர முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தக்காளி உற்பத்திக்கு பெயர் போன நகரமாக அறியப்படும் கர்நாடகாவின் கோலாரில் இம்முறை தக்காளிக்கு பதிலாக விவசாயிகள் பீன்ஸ் சாகுபடியில் இறங்கியுள்ளனர். இதுவும் தக்காளி விலை உயர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அங்குள்ள சந்தையில் 15 கிலோ தக்காளி 1100 ரூபாய்க்கு விற்பனையாகியிருப்பதால் தக்காளி விலை வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பெங்களூரில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தக்காளி தற்போழுது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திராவிலும் தக்காளி விலை 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டெல்லிக்கு ஹரியானா மற்றும் உத்திரபிரதேசத்தில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்ததால் தக்காளிக்காக தற்போழுது பெங்களூவையே பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையை வீணாக்கியதாக இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு – விவாகரத்து குறித்த அசின் பேச்சு!

இதனால் டெல்லி, கொல்கத்தா, உத்திரபிரதேசத்தில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் ஒரு கிலோ தக்காளியின் விலை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் பிறகு தற்போழுது தான் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தக்காளியின் விலை 80 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போழுது தமிழகத்தில் தக்காளியின் விலை 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews