வாழ்க்கையை வீணாக்கியதாக இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு – விவாகரத்து குறித்து அசின் பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், கனவு கன்னியாகவும் வளம் வந்தவர் நடிகை அசின். தமிழில் மோகன் ராஜா இயக்கிய எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அவர் நடித்த அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில் திரையுலகில் ராசியான நடிகையாகவும் வந்தார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் மிகவும் பிசியாக நடித்து முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். கடந்து 2016-ம் ஆண்டு ராகுல் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து அசின் விலகினார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை அசின் அவரது கணவர் ராகுல் ஷர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் ராகுல் ஷர்மாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனை அறிந்த அசின் அவரை எச்சரித்தும் அவர் கேட்காததால் அவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஆசின் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவா… மாஸ் அப்டேட்!

இந்த செய்திகள் குறித்து அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். கோடை விடுமுறையில் தாங்கள் இருவரும் இருக்கும் இந்த சூழலில் கற்பனையான உண்மை இல்லாத செய்திகள் வெளி வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தங்கள் திருமணத்தின்போது இருவரும் பிரிந்து விட்டதாக வெளியான செய்தியை தற்போழுது நினைவூட்டுகிறது என குறிப்பிட்ட அசின், இந்த விளக்கத்தின் காரணமாக வாழ்க்கையில் ஐந்து நிமிடங்களை வீணாக்கிவிட்டதாக பதில் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...