தாஜ்மஹாலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.. அதில் யார் ஹீரோ தெரியுமா!

அந்த காலத்தில் பெரும்பாலான திரைப்படங்கள் காவியங்கள் மற்றும் புராணங்களை மையமாக வைத்து படமாக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் பிரபலமடைந்த நாவல்களை மையமாக வைத்தும் சில திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் தமிழ் எழுத்தாளர்களின் மிகவும் பிரபலமானவர் அகிலன். இவர் எழுதிய நாவல்கள் தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. வயது வேறுபாடு இன்றி பலரும் அவருடைய நாவல்களை விரும்பி வாசித்தார்கள்.

கல்கி வார இதழில் அவர் எழுதிய பிரபலமான தொடர்கதை தான் பாவை விளக்கு. அகிலனுடைய இந்த நாவல் திரைப்படமானது. குடும்பக் கதையை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் பிரபலம் அடைந்து கொண்டிருந்த ஏபி நாகராஜன் இந்த படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுதினார். ஏபி நாகராஜனின் படங்களை எல்லாம் தொடர்ந்து டைரக்ட் செய்து கொண்டிருந்த சோமு பாவை விளக்கு படத்தையும் டைரக்ட் செய்தார்.  நாவலை ஒட்டியே திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. அதனை சோமு நேர்த்தியாக படமாக்கி இருந்தார்.

மேலும் விஜய் அரங்கம் என்ற படத்தொகுப்பாளரும், கோபண்ணா என்ற ஒலி பதிவாளரும் இணைந்து படத்தை தயாரித்தார்கள். இந்த படத்தின் ஆரம்பமே புதுமையாக எடுக்கப்பட்டிருந்தது. ஒரு தோட்டத்தில் சிவாஜி, அசோகன், வி கே ஆர் என கலைஞர்கள் அமர்ந்திருக்க அவர்களுக்கு சிவாஜி பாவை விளக்கு கதையை படித்துக் காட்டுகிறார், இப்படி ஆரம்பிக்கும் காட்சி திரைப்படமாக நகர்கிறது. கதை கேட்க அமர்ந்திருந்த கலைஞர்களே படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படித்துவிட்டு ஒழுங்கான வேலை இன்றி தவிக்கும் தணிகாசலத்தின் வாழ்வில் நான்கு பெண்கள் ஒன்றன் பின் ஒருவராக குறிக்கிடுகிறார்கள். கல்வி கற்கச் சென்ற இடத்தில் அவன் தங்கி இருக்கும் வீட்டின் விதவை பெண் அவனை மானசீகமாக காதலிக்கிறாள். பின்னர் தொழில் நிமித்தம் அவன் செல்லும் ஊரில் செங்கமலம் என்ற நாட்டிய பெண்ணுடன் அவனுக்கு காதல் ஏற்படுகிறது, ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அதன் பின் தணிகாசலத்திற்கும் அவனது முறை பெண்ணிற்கும் திருமணம் நடைபெறுகிறது. இதே சூழலில் கல்லூரி விரிவுரையாளர் அவன் மீது காதல் கொள்கிறாள்.

முறையான தொழில் இல்லாத தனிகாசலம் வேறு வழியின்றி எழுத்தாளனாகி தன் காதல் கதையை கதையாக எழுதுகிறான். இப்படி அமைக்கப்பட்ட கதையில் தனிகாசலமாக சிவாஜியும் அவரை நேசிக்கும் பெண்களாக பண்டரிப்பாய், சௌகார் ஜானகி, குமாரி கமலா, எம் என் ராஜம் ஆகியோர் நடித்தனர். இவர்களை சுற்றி முழு கதையும் அமைக்கப்பட்டு இருந்தது. சிவாஜியும் தன் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார். கமலா பாடி ஆடும்போது சிவாஜி காட்டும் முக பாவனைகள் அபாரமாக அமைந்திருக்கும். மேலும் குமாரி சிறப்பான நடனத்தை இந்த படத்தில் ஆடியிருப்பார். மருதகாசியின் பாடல்களுக்கு கேபி மகாதேவன் ரசிக்கும்படி இசை அமைத்திருந்தார்.

விஜய்யை நேரில் பார்க்க கேரவன் முன் காத்திருந்த அஜித்! அதன்பின் நடந்த அதிரடி!

காவியமா நெஞ்சின் ஓவியமா, ஆயிரம் கண் போதாது வண்ண கிளியே, வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ஆகிய பாடல்கள் பிரபலமடைந்தன. பாவை விளக்கு படத்திற்கு மற்றொரு சிறப்பு உண்டு தாஜ்மஹாலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமை தான் அது. சிவாஜியும், ராஜனும் அங்குபாடும் காவியமா நெஞ்சில் ஓவியமா பாடல் காலம் கடந்தும் காட்சியாக மனதில் பதிந்து விட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews