உலகின் முதல் 24ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ்..!

உலகின் முதல் 24ஜிபி கொண்ட ரேம் கொண்ட ஸ்மார்ட் போன் வரும் ஜூலை 5ஆம் தேதி சீனாவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்த போன் இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முதல் 24ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன் குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்

Nubia RedMagic 8S Pro ஸ்மார்ட்போன் 24ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஜூலை 5ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இந்த போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது.

Nubia RedMagic 8S Pro ஸ்மார்ட்போன் குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ:

* 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1080 x 2400 ரெசலூசன் கொண்டது

* ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 பிராஸசர்
* 24ஜிபி LPDDR5 ரேம்

* 1TB UFS 3.1 இண்டர்னல் ஸ்டோரேஜ்

* 64MP பின்புற கேமரா (முதன்மை) + 8MP பின்புற கேமரா (அல்ட்ராவைடு) + 2MP பின்புற கேமரா (மேக்ரோ)

* 16எம்பி செல்பி கேமரா

* 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி

* ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

Nubia RedMagic 8S Pro சீனாவில் சுமார் $799 என்ற விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளில் வெளியாகும் தேதி குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews