‘தளபதி 67’ படமா… தெறித்து ஓடிய பிரபலம்! மாஸ் அப்டேட்!

வம்ஷி இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் ‘வாரிசு’ படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
இதற்கடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படம் குறித்து தளபதி ரசிகர்கள் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.

‘தளபதி 67’ டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது , படத்தில் விஷால், நிவின் பாலி, சஞ்சய் தத் மற்றும் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்திவந்தனர் , த்ரிஷா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘தளபதி 67’ படத்தில் நடிப்பது குறித்து இயக்குனர் மிஷ்கின் யோசனையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘தளபதி 67’ போன்ற ஒரு பெரிய திட்டத்தில் ஒப்பந்தமாகும் போது தனது சொந்த ஸ்கிரிப்ட் மற்றும் இயக்கும் செயல்முறையைத் தடுக்கும் என மிஷ்கின் நினைப்பதாக கூறப்படுகிறது.

துணிவு படத்திற்காக வரிந்து கட்டி வரும் உதயநிதி! கிடைத்த மாஸ் அப்டேட்!

இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தில் விஜய் 40 முதல் 50 வயது தக்க நபராக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் “தளபதி 67” இல் எந்த இசையும் இருக்காது. இந்தத் திரைப்படம் பாடல்களைக் காட்டிலும் பல தீம் மியூசிக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது , படம் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருக்கவும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.