முதல் படமே அட்டர் பிளாப்..சோர்ந்த ராகவா லாரன்ஸ்-க்கு குழந்தை கொடுத்த மோட்டிவேஷன்..

நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர்தான் ராகவலா லாரன்ஸ். சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயனிடம் கார் கிளீனராக வேலை பார்த்து வந்த லாரன்ஸ் சிறப்பாக நடனமாடும் திறமையைப் பெற்றிருந்தார். இப்படி ஒருநாள் சூப்பர் சுப்புராயன் ரஜினியின் படம் ஒன்றிற்கு சண்டைக் காட்சி சூட்டிங்கில் இருந்த போது ரஜினியிடம் அறிமுகத்தைப் பெற்று அவரிடம் நடனமாடிக் காட்டியிருக்கிறார். அப்போது ரஜினிகாந்த் லாரன்ஸை பிரபுதேவாவைச் சந்திக்குமாறு பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.

அதன்பின் பிரபுதேவாவிடம் நடனப் பயிற்சியை முறையாகக் கற்றுக் கொண்டு 1993 முதல் நடன இயக்குநராக பணியாற்றி வந்திருக்கிறார் லாரன்ஸ். அவருக்குச் சிறுவயதில் மூளையில் கட்டி இருந்த காரணத்தினால் அப்போது ராகவேந்திரரிடம் வேண்டிக்கொள்ள அவரது அருளால் குணமடைந்தார். எனவே தனது பெயருடன் ராகவா சேர்த்து ராகவா லாரன்ஸ் என அறியப்பட்டார்.

தொடர்ந்து 1998-ல் தெலுங்குப் படத்தில் நடிகராக அறிமுகமான லாரன்ஸ் தொடர்ந்து தமிழில் பிரபு தேவாவைப் போல் ஒரு பாடலுக்கு நிறைய படங்களில் நடனமாடினார். இவர் நடித்து நடனமாடிய பாடல்கள் மூலம் பிரபலமாகி பின்னர் ஸ்டைல், அற்புதம் படங்கள் மூலம் முழுநேர ஹீரோவாக உருவெடுத்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் ஸ்டைல். ஆனால் அந்தப் படத்தில் பாடல்கள் ஹிட்டான போதும் படம் தோல்வியைத் தழுவியது.

இதனால் அப்போது மிகுந்த மனச்சோர்வுற்றிருக்கிறார் ராகவா லாரன்ஸ். அப்போது அடுத்த படத்திற்கு யாரும் புக் செய்ய வராதால் தான் கட்டிய ராகவேந்திரர் கோவில் முன்பு அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு ஒரு குழந்தை வந்து அவரிடம் அவரின் ஸ்டைல் படம் மிகவும் பிடித்திருந்தது என்று கூற, அப்போது தான் அவருக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. சோர்வுற்றவரின் ராகவா லாரன்ஸை குழந்தைவடிவில் ராகவேந்திரரே வந்து ஊக்கம் கொடுத்தது போல் பாவித்து தொடர்ந்து அடுத்தடுத்த முயற்சிகளில் இறங்க பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எனினும் படங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக ஓடவில்லை.

பிரபல நடிகருக்காக 2 மாதம் காத்திருக்கத் தயாரான எம்.ஜி.ஆர்.. ஆடிப் போன அந்த நடிகர் செய்த செயல்

ஆனால் 2007-ல் வெளியான முனி படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனை கொடுத்தது. இப்படத்தினை இவரே இயக்கினார். ஹாரர் திரில்லராக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. முனியாக ராஜ்கிரண் நடிக்க, அவரது ஆவி உள்ளே புகுந்து ராகவா லாரன்ஸ் அதகளம் செய்யும் காட்சிகள் தியேட்டரையே அதிர வைத்தது. இந்தப் படத்தின் ஹிட்டுக்குப் பின்னர் வரிசையாக இயக்குநர்கள் தேடி வர ஆரம்பித்தனர்.

தொடர்ந்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா, காஞ்சனா 2, சிவலிங்கா, சந்திரமுகி என பேய்ப்படங்களிலேயே நடித்ததால் இவர் இந்த மாதிரி படங்களுக்குத்தான் சரிபட்டு வருவார் என்ற முத்திரை விழுந்தது. இவை அனைத்தையும் உடைக்கும் விதமாக கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ராகவா லாரன்ஸ்-ன் ஒட்டுமொத்த இமேஜையும் உடைத்து அவருக்குள் இருக்கும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வந்தது. படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் முன்னணி இயக்குநர்களில் படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது பெயரில் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் நிறைய உதவிகளும் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...