சான்ஸ் கேட்டு அப்பாவிடம் நடித்துக் காட்டிய தளபதி விஜய்.. எந்தப்பட வசனம் தெரியுமா?

இன்று இந்தியத் திரையுலகின் உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய் தனது தந்தையின் மூலமாகத்தான் சினிமாவில் என்ட்ரி ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி, நான் சிகப்பு மனிதன், இது எங்கள் நீதி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் அதன்பின் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

எனினும் வாலிபனான போது தன்னுடைய துறை இதுதான் என தீர்க்கமாக முடிவெடுத்திருக்கிறார். அந்த சமயம் சென்னை லயோலாவில் காட்சி ஊடக தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேசன்) படிக்க, சினிமா ஆர்வம் அவரைத் தூண்டியதால் கல்லூரியில் இடைநிறுத்தம் செய்தார்.

அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் புரட்சி இயக்குநராக விஜயகாந்தை வைத்து பல ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். விஸ்காம் படிப்பினை பாதியிலேயே விட்ட தளபதி விஜய் தன்னுடைய பாதையும் இனி சினிமா தான் என தேர்ந்தெடுத்து வீட்டில் அப்பாவிடம் சொல்ல அவருக்கு அதில் துளியளவும் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. ஒருவழியாக அப்பாவின் சம்மதம் பெற்று முதன் முதலாக தனது தந்தையின் இயக்கத்தில் 1992-ல் நாளைய தீர்ப்பு படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

‘ஐயா’ பட பாடல் வரிகளை.. வேறொரு படத்தில் சேர்த்து சூப்பர் ஹிட் பாடலாக்கிய இயக்குநர் ஹரி.. அது இந்தப் பாட்டு தானா?

இவர் தன் தந்தையிடம் நடிக்க ஆசை தெரிவித்த போது, எஸ்.ஏ. சந்திரசேகர் ஏதாவது வசனங்கள் பேசிக் காட்டு என்று கூற, அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாமலை படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் படத்தில் வரும் மாஸ் வசனமான ‘இந்த நாள் இதே நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோ..’ என்ற வசனத்தை அச்சுப் பிசகாமல் அப்படியே ரஜினி சொல்வது போல் சொல்லிக் காட்டி கடைசியில் தொடையைத் தட்டியிருக்கிறார். அப்போது தான் தன் மகனின் மேல் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு நம்பிக்கை பிறக்க அவரை ஹீரோவாக்கி இருக்கிறார்.

இப்படி தன் தந்தை மூலம் ஹீரோவாக விஜய் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கு அடுத்ததாக அவர் தனது திறமையை வளர்த்துக் கொண்டு தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களால் செதுக்கப்பட்டு இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...