அந்நியன் பட கிளைமேக்ஸ்.. ஷங்கர் செஞ்ச அந்த ஒரு மேஜிக்.. ஒட்டுமொத்த யூனிட்டே ஆச்சர்யப்பட்ட சம்பவம்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2005-ல் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் தான் அந்நியன். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இப்படத்தினை தயாரித்திருந்தார். சேது, தூள், தில், ஜெமினி ஹிட்டுக்குப் பிறகு தமிழின் முன்னணி ஹீரோவாக விக்ரம் வளர்ந்திருந்த நேரம் அது. எனவே அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் சுஜாதாவின் வசனம், விக்ரமின் அசுர நடிப்பு, ஷங்கரின் பிரம்மாண் இயக்கம் போன்றவற்றால் படத்தின் மீதான ஹைப் கூட சொன்னபடியே அதை நிகழ்த்தியும் காட்டியது அந்நியன்.

சமூகக் குற்றங்களைப் புரிவோரை கருடபுராண நூல் படி தண்டனை கொடுக்கும் அந்நியன் விக்ரம், ரூல்ஸ் ராமானுஜம் விக்ரம், சதாவைக் காதல் வலையில் வீழ்த்தும் ரெமோ விக்ரம் என மூன்று கெட்டப்புகளில் விக்ரம் அசத்தலாக நடித்திருந்தார். பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகள் படத்திற்குக் கூடுதல் பல சேர்த்தது. மேலும் விவேக், பிரகாஷ்ராஜ் போன்றோரின் நடிப்பும் படத்தில் பேசப்பட்டது. இப்படி குறைகளே சொல்லமுடியாதபடி ஒரு கமர்ஷியலில் சமூகக் கருத்தும் கொண்டு ஷங்கர் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்தார்.

இந்தப் படத்தில் அதிகம் பேசப்பட்டது கிளைமேக்ஸ் காட்சிதான். பிரகாஷ்ராஜ் கஸ்டடடியில் விக்ரம் இருக்கும் போது அவர் செய்யும் மேனரிசங்களைப் பார்த்து வாயைப் பிளக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவிற்கு நடிப்பில் வேறுபாடு காட்டியிருப்பார். இயக்குநர் ஷங்கர் இந்த சீனுக்காக முதன் முதலில் எழுதியது அந்நியன் விக்ரம் மட்டுமே வரும்படி அமைத்திருந்தாராம். பின்னர் இந்தக் காட்சிக்காக தயாராகும் வேளையில் திடீரென ஷங்கருக்கு புதிதாய் ஒரு யோசனை தோன்ற தனது அசிஸ்டெண்ட்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.

அதாவது கிளைமேக்ஸ்-ல் அந்நியன் விக்ரமுக்குப் பதிலாக அம்பி, அந்நியன்  கேரக்டர்களையும் இணைத்து இரண்டையும் மாறி மாறி நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க உதவி இயக்குநர்கள் மெய்சிலிர்த்துப் போய்விட்டனர். எப்படி தங்களது குருவால் இப்படி யோசிக்க முடிகிறது என எண்ணி உடனடியாக ஸ்கிரிப்டை மாற்றினர். இதன்படி அந்தக் காட்சியில் அம்பி மற்றும் அந்நியன் விக்ரம் மாறி நடிக்கும் போது பேசும் வசனங்களை கருப்பு மற்றும் சிவப்பில் தனித்தனியாக எழுத ஷங்கருக்கே அது மிகவும் பிடித்துப் போய் விட்டது.

‘முதல்வன்’ படத்துல வந்த இந்தப்பாட்டு எங்கிருந்து எடுத்தது தெரியுமா? படித்ததை பாடலாக்கிய வைரமுத்து

மேலும் அப்போது மேக்கப் ரூமில் இருந்த விக்ரமிடம் ஷங்கர் இதனைக் காட்ட விக்ரம் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். சும்மாவே நடிப்பில் பட்டையைக் கிளப்பும் விக்ரம் இதுபோன்று ஒரே காட்சியில் இரண்டு வெவ்வேறு கேரக்டரில் உடனடியாக மாறி மாறி நடிப்பதை சவாலாக ஏற்றுக் கொண்டு அந்தக் காட்சியில் நடிக்க ஒட்டுமொத்த டீம் ஓர்க்-ம் சூப்பராக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது.

இன்னமும் அந்நியன் கிளைமேக்ஸ் காட்சியை நாம் பார்க்கும் போது இந்தக் காட்சியானது நம்மை ஒருகணம் புல்லரிக்க வைக்கும். அப்போது பிரகாஷ்ராஜ் ஒரு வசனம் பேசுவார். “பின்றியேடா.. எம்.ஜி.ஆர பார்த்திருக்கேன்.. சிவாஜிய பார்த்திருக்கேன்.. ரஜினிய பார்த்திருக்கேன்.. கமல பார்த்திருக்கேன்.. ஆனா இப்படி ஒரு நடிப்பை பார்த்ததில்லடா“ என்று பேசுவார். உண்மையாகவே இந்தக் காட்சியில் விக்ரமின் நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...