‘ஐயா’ பட பாடல் வரிகளை.. வேறொரு படத்தில் சேர்த்து சூப்பர் ஹிட் பாடலாக்கிய இயக்குநர் ஹரி.. அது இந்தப் பாட்டு தானா?

திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகனை படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை சீட்டின் நுனியில் உட்கார வைத்து நகம்கடிக்க வைத்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதை உருவாக்கி வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர்தான் இயக்குநர் ஹரி. தனது முதல் படமான பிரசாந்த் ஹீரோவாக நடித்த தமிழ் படத்தின் மூலம் தனது இயக்குநர் படத்தைத் தொடங்கிய ஹரி சிங்கம் படத்தில் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்தார்.

இன்று லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவை தமிழ் சினிமாவில் முதன் முதலாக ‘ஐயா’ படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியது இவரே. ஐயா படத்தினை இன்றும் தொலைக் காட்சிகளில் போடும் போது குடும்பத்துடன் அமர்ந்து பார்ப்பதைக் கண்டிருக்கிறோம். சரத்குமார் இரு வேடங்களில் நடித்த ஐயா படம் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்று. இந்தப் படத்தில் பரத்வாஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் மெலடியாக ஒலித்தன. அப்படி ஹிட்டான பாடல்களில் ஒன்றுதான் ‘ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்..’ நயன்தாரவை இந்தப் பாடல் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு போய் சேர்த்தது.

முதல் படமே அட்டர் பிளாப்..சோர்ந்த ராகவா லாரன்ஸ்-க்கு குழந்தை கொடுத்த மோட்டிவேஷன்..

இந்தப் பாடல் இப்பொழுது கேட்டாலும் தனி காதல் உணர்வைக் கொடுக்கும் ரகம். பாடலாசிரியர் பா.விஜய்யின் வரிகளுக்கு இசையமைப்பளார் பரத்வாஜும், கே. கே. மற்றும் சாதனா சர்கம் ஆகியோர் பின்னனி பாடி உயிர் கொடுத்திருப்பர். இந்தப் பாடலில் சில வரிகளை பா.விஜய் சேர்க்க ஆனால் அப்போது பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். அந்த வரிகள் தான் ‘தாலி கட்ட தேவையில்லை நீ தான் பொண்டாட்டி..’ என்ற வரிகள்.. இந்த வரிகளை ‘ஒரு வார்த்தை கேக்க..’ பாடல் மெட்டுடன் இணைத்துப் பாடினால் சரியாக அமையும்.

எனவே இயக்குநர் ஹரி இந்த வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டு தனது அடுத்த படமான தாமிரபரணி படத்திற்காக பயன்படுத்தினார். ஐயா படத்தில் இடம் பெற்றது போல் அதே பாணியில் இன்னொரு பாடல் வேண்டும் என்பதற்காக தாமிரபரணி படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் சொல்லி அப்போது இந்த வரிகளைக் கூறியிருக்கிறார். அப்போது யுவன் போட்ட மெட்டில் மீதி வரிகளை ஹரியே எழுதி உருவான பாடல்தான் ‘தாலியே தேவையில்ல நீ தான் என் பொஞ்சாதி..’ என்ற பாடல்.

எனவே முன்னர் ஐயா படத்தில் இடம்பெற்ற பாடலும், தாமிரபரணி பாடலும் இரண்டும் வேறு வேறு ரகமாக இருந்தாலும் இந்த இரண்டு பாடல்களுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...