பிரபல நடிகருக்காக 2 மாதம் காத்திருக்கத் தயாரான எம்.ஜி.ஆர்.. ஆடிப் போன அந்த நடிகர் செய்த செயல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் குண நலன்களை பற்றி நாள்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தன்னைச் சார்ந்தவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஏராளமான பல உதவிகளைச் செய்துள்ளார். அவர் திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த போது 1971-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ரிக்ஷாக்காரன். எம்.ஜி.ஆருடன் மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.

இந்தப் படம் எம்.ஜி.ஆரின் சொந்தத் தயாரிப்பு ஆகும். சத்யா மூவிஸ் சார்வில் ஆர்.எம்.வீரப்பன் இந்தப் படத்தினைத் தயாரித்திருந்தார். 1971-ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு ரிக்ஷாக்காரன் படத்திற்காக வழங்கப்பட்டது. கிருஷ்ணன் நாயர் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்தப் படத்திற்காக எம்.ஜி.ஆர். முதலில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உரிய நடிகர்களைத் தேர்வு செய்துவிட்டாராம். ஆனால் முக்கிய வேடமான வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்காக யாரை நடிக்க வைக்கலாம் என யோசித் போது அப்போது அவர் முன் முதல் ஆளாக நினைவுக்கு வந்தவர் மேஜர் சுந்தர்ராஜன். எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் ரிக்ஷாகாரன் பட தொடக்கத்தில் மேஜர் சுந்தர் ராஜனின் கால்ஷீட் கிடைக்கவில்லை.

அந்நியன் பட கிளைமேக்ஸ்.. ஷங்கர் செஞ்ச அந்த ஒரு மேஜிக்.. ஒட்டுமொத்த யூனிட்டே ஆச்சர்யப்பட்ட சம்பவம்

அப்போது அவர் சிவாஜியின் படங்களில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். மேலும் அவரது கால்ஷீட் டைரியும் நிரம்பி வழிந்தது. எனவே தயாரிப்பு நிறுவனமும், இயக்குநரும் மேஜர் சுந்தர்ராஜனை அணுக அவர் அப்போதைக்கு முடியாது என்று கைவிரித்திருக்கிறார். எனினும் எம்.ஜி.ஆருக்கு மேஜர் சுந்தர்ராஜனை விட மனமில்லை. எனவே உடனே மேஜர் சுந்தர்ராஜனுக்கு போனைப் போட மறுமுனையில் மேஜர் சுந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் குரலைக் கேட்டதும் ஒருகனம் அமைதியாகிறார்.

பின் எம்.ஜி.ஆர். அவரிடம் நீங்கள் என் படத்தில் நடித்தால் சந்தோஷப் படுவேன். உங்களது கால்ஷீட் பிரச்சனை இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். ரெண்டு மாசம் லேட் ஆனாலும் பரவாயில்லை என்று கூற, மேஜர் சுந்தர்ராஜன் எம்.ஜி.ஆரே நமக்காக இறங்கி பேசுகிறார் என்று எண்ணி உடனே தன்னுடைய கால்ஷீட் டைரியில் உள்ள அனைத்து தேதிகளையும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு ரிக்ஷாகாரன் படத்தில் நடித்துக் கொடுத்தார்.

இப்படி ஒரு உச்ச கலைஞனாக ஒரு படம் நன்றாக வர வேண்டம் என்பதற்காக தனது நிலையைக் கூட தாழ்த்தி படம் சிறப்பாக வர வேண்டும் என்பதிலும், ரசிகர்களை திருப்திப்படுத்தவும் செய்தார் எம்.ஜி.ஆர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...