தளபதி 68 படத்தில் இணைந்த அஜித் பட ஹீரோயின்! அதுவும் அவருக்கு ஜோடியாகவா?

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி முன்னணி ஹீரோவாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் லியோ திரைப்படம் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தின் கொண்டாட்டம் இன்னும் சற்றளவும் குறையாத நிலையில் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டுகள் வரத் தொடங்கி பட்டையை கிளப்பி வருகிறது.

அந்த வகையில் தளபதி விஜய் அடுத்ததாக ஏஜிஎஸ் என்டர்டைமெண்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை அக்டோபர் இரண்டாம் தேதி பிரசாந்த் ஸ்டூடியோவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த வீடியோ லியோ திரைப்படம் வெளியான பின்பு சமீபத்தில் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு மக்களிடையே இந்த படத்தில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

அந்த வகையில் தளபதி 68 திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், யோகி பாபு, சினேகா, லைலா, அஜ்மல், பிரேம்ஜி என பல நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ராசியான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார்.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் கதை குறித்த மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதால் இளமையான கதாபாத்திரத்திற்காக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 25 வயது தக்க விஜய்யை இந்த படத்தில் மீண்டும் நாம் பார்க்க முடியும்.

மேலும் இந்த திரைப்படத்திற்கு வில்லனாக மைக் மோகன் நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் மீண்டும் மைக் மோகன் காண்பதற்காக தனி ரசிகர் கூட்டம் ஆர்வமாக உள்ளது. தற்பொழுது இந்த படத்தின் நடிக்க உள்ள நடிகர்கள் பலர் படத்தின் பூஜையின் போது கலந்து கொண்டுள்ளனர். ஆனால் அதில் கலந்து கொள்ளாத ஒரு நடிகை குறித்த மாஸ் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது.

லியோ படத்தின் மூலம் மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! நஷ்ட ஈடு மட்டும் இத்தனை கோடியா?

அந்த வகையில் தளபதி 68 படத்தில் அஜித்தின் வரலாறு படத்தில் நடித்த கதாநாயகி கனிகா. இந்த படத்தில் இணைய உள்ளதாக தெறிக்கவிடும் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகை கனிகா அதன்பின் சினிமாவில் இருந்து விலகி தற்பொழுது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கனிகா தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மைக் மோகன் அவர்களின் மனைவியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இப்படி பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து உருவாகும் தளபதி 68 திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews