தளபதி 68 திரைப்படம் ஒரு பிரம்மாண்ட ஹாலிவுட் படத்தின் காப்பியா?

தளபதி விஜய் வாரிசு, லியோ எனும் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களை தொடர்ந்து தனது 68வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் வித்தியாசமான முயற்சியாக 90களில் ஹீரோவாக மற்றும் ஹீரோயின் ஆக நடித்த பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். புதிய கீதை திரைப்படத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் உடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்து இருப்பது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பிரமாண்ட பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கிய தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில் அடுத்த படப்பிடிப்பிற்காக படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது. சென்னையில் படத்தின் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தாய்லாந்தில் தளபதி 68 படத்தின் ஒரு சிறந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தாய்லாந்து காட்சிகள் படமாக்கப்பட்டு தளபதி விஜய் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் அதாவது அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தில் தளபதி விஜய் வில்லத்தனத்துடன் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக அடுத்தடுத்து தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தளபதி 68 இன் கதை குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய லியோ திரைப்படம் ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் என்னும் ஆங்கில நாவலின் தழுவலை மையமாக வைத்து இயக்குனர் லோகேஷ் உருவாக்கியதாக பல தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து தளபதி விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தின் கதை குறித்த அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மன்சூர் அலிகான் பேசிய பேச்சுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படம் ஹாலிவுட் சில வருடங்களுக்கு முன் வெளியான மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆன தி லூப்பர் படத்தை மையமாக வைத்து உருவான கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் டைம் ட்ராவல் மையமாக வைத்து உருவான கதை என்றும் 30 வருடத்திற்கு முன் எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்து தன் எதிரிகளை பழிவாங்கும் கதை என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜோசப் கோர்டான் லெவிட் மற்றும் ப்ருஸ் வில்லிஸ் என்னும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடித்திருப்பார்கள்.

தளபதி விஜய் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் தளபதி 68 திரைப்படம் ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருந்தாலும் இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார் போல சில மாற்றங்களை கொடுத்து கமர்சியல் படமாக உருவாக்குவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...