மன்சூர் அலிகான் பேசிய பேச்சுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையா?

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் மன்சூர் அலிகான். 360 திரைப்படங்களுக்கு மேல் நடித்த மன்சூர் அலிகான் தற்பொழுது குணச்சித்திரம், காமெடி உள்ளிட்ட பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மன்சூர் அலிகானிற்கு கம்பேக் திரைப்படமாக அமைந்தது. அடுத்தடுத்து தனது சிறந்த நடிப்பால் மக்களை மீண்டும் மகிழ்விப்பார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சில சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு மன்சூர் அலிகான் மாட்டிக் கொண்டுள்ளார். அந்த பேட்டியில் நடிகை திரிஷா குறித்து சில ஆபாசமான கருத்துக்களை இயல்பாக பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், இதற்கு முன்னதாக லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது மேடையிலும் இதுபோன்ற சர்ச்சை உரிய கருத்துக்களை மன்சூர் அலிகான் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை திரிஷா, தன்னை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளதாகவும், மன்சூர் அலிகான் பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், பாலின பாகுபாட்டை பிரதிபலிக்க கூடிய வகையிலும் இருந்ததாக விமர்சித்துள்ளார். திரிஷா, தனது வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் இது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் நடத்தையை கண்டிப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.சக கலைஞர்கள் எந்த துறையாக இருந்தாலும் அவர்களுக்கு எதிரான இத்தகைய பேச்சு தவிர்க்கப்பட வேண்டும் என்று நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

இதே போல் நடிகை மாளவிகா மோகனன், பாடகி சின்மயி தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் திரிஷாவுக்கு ஆதரவாகவும் மன்சூர் அலிகானை கண்டித்தும் பதிவிட்டுள்ளனர். இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் விளக்கம் கொடுத்திருந்தாலும் அது ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் இந்த சர்ச்சை பெரிதாக வெடிக்கத் துவங்கியது.

இயக்குனர் கட் சொல்லியும் ரத்தம் சிந்திய சிவாஜி! எந்த படத்தில் தெரியுமா?

இந்நிலையில், நடிகை திரிஷா குறித்து ஆபாசமாக கருத்துக்களை வெளியிட்ட நடிகர் மன்சூர் அலிகாம் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த வழக்கை தாமாக முன்வந்து எடுத்திருக்கக்கூடிய தேசிய மகளிர் ஆணையம் பெண்களுக்கு எதிரான இது போன்ற கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. மேலும் நடிகை திரிஷாவிற்கு நேர்ந்த இந்த சம்பவத்திற்காக வருத்தப்படுவதாகவும், வன்மையாக கண்டித்து வருவதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளது.

மேலும், நேரடியாக தமிழக டிஜிபி அவர்கள் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் நடிகர் மன்சூர் அலிகான் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...