சிம்புவுக்கு முன்னாடி முந்திக்கொண்ட சந்தானம்!.. அந்த பிக் பாஸ் போட்டியாளருக்கு அப்படியொரு வரவேற்பு!..

பிக் பாஸ் சீசன் 7 80 நாட்களை கடந்துள்ள நிலையில் இன்னும் 20 நாட்களில் ஒட்டுமொத்த நிகழ்ச்சியே ஒருவழியாக முடிந்து விடும். இந்த சீசனில் பிக் பாஸ் டைட்டிலை மாயா, விசித்ரா மற்றும் விஜே அர்ச்சனா உள்ளிட்ட மூன்று பேரில் யாரோ ஒருவர் தான் தட்டி செல்லப் போகிறார் என ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி விட்டனர்.

இதற்கு முன் இருந்த பிக்பாஸ் சீசன்களில் இந்த குழப்பம் எல்லாம் ரசிகர்களுக்கு வந்ததே கிடையாது. அந்த அளவுக்கு ஒரு போட்டியாளர் மக்கள் மனதை அதிக அளவில் வென்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

23 6580648b8932f

கூல் சுரேஷை வரவேற்ற சந்தானம்:

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பிக்க நினைத்த நடிகர் கூல் சுரேஷை வார இறுதியில் கமல் சார் எவிக்ட் செய்து வெளியே அனுப்பிவிட்டார்.

நடிகர் சிம்புவின் நண்பரும் ரசிகரான கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய நிலையில் சிம்புவை சந்தித்த வீடியோ வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் வெந்து தணிந்தது காடு சந்தானத்துக்கு வணக்கத்தை போடு என தனது நண்பன் சந்தானத்தை சந்தித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மாலை அணிவித்து வாழ்த்து:

விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சியிலிருந்து காமெடியனாக தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வந்த சந்தானம் தற்போது காமெடி ஹீரோவாக நடித்து வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கூல் சுரேஷ்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் திருடன் கதாபாத்திரத்தில் கூல் சுரேஷ் நடித்திருப்பார். நடிகர் சிம்புவை போலவே சந்தானத்துடனும் நல்ல நட்புறவை பல ஆண்டுகளாக பாராட்டி வருகிறார் கூல் சுரேஷ்.

கூல் சுரேஷை சந்தித்த சந்தானம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள பிக் பாஸ் பிரபலம் கால் சுரேஷுக்கு இனிமேல் எல்லாமே நல்லதாக நடக்கும் என மனமார பாராட்டியுள்ளார். சிம்புவின் காதல் அழிவதில்லை படத்திலிருந்து நடித்து வரும் கூல் சுரேஷ் இன்னமும் ஏழ்மையான நிலையில் தான் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 75 நாட்களை கடந்து வெளியேறியுள்ள கூல் சுரேஷ் கிட்டத்தட்ட வாரத்துக்கு 1.5 லட்சம் வரை சம்பளம் என்றும் 10 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்த நிலையில் ஒட்டுமொத்தமாக 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.