20 வருஷ கனவு!.. அஜித்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் நெகிழ்ச்சி!

பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னராக தேர்வாகி 50 லட்சம் பரிசுத் தொகையும் கோப்பையையும் வென்றவர் ஆரவ். மாடல் நடிகராக உள்ளே வந்த ஆரவுக்கு ஜெமினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வசூல் ராஜா எம்பிபிஎஸ் போலவே மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டைட்டிலில் நடித்து அறிமுகமானார். ஆனால், அந்த படம் அட்டு ஃபிளாப் ஆனதால் அப்செட் ஆகி விட்டார். அதன் பின்னர்  யாஷிகா ஆனந்த், ஓவியாவை ஜோடியாக்கி ராஜபீமா எனும் படத்தில் நடித்தார். அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

GBNtChOWcAAt mx

அஜித்துடன் இணைந்த ஆரவ்:

கடைசியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான கலகத் தலைவன் படத்தில் வில்லனாக நடித்து அங்கீகாரம் பெற்ற ஆரவ் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார் ஆரவ்.

20 வருடங்களாக நடிகர் அஜித்தை சந்திக்க வேண்டும் என்கிற தனது கனவு நிறைவேறியது என ஆரவ் அஜித்துடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆரவ்வுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

15 கிலோ எடையை குறைத்த அஜித்:

விடாமுயற்சி படப்பிடிப்பு மொத்தமும் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

லியோ படத்தில் வில்லன்களாக நடித்த சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இந்த படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித் சென்னைக்கு வந்த நிலையில், மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்த அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு உதவியது பெரும் பேசு பொருளாக மாறியது. பொதுமக்கள் பலருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த மிக்ஜாம் புயலில் உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டிய நிலையில், விடாமுயற்சி திரைப்படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த படத்துக்காக நடிகர் அஜித் குமார் 15 கிலோ வரை எடையை குறைத்து நடித்து வருவதாகவும், நடிகர் அஜித் அசைவத்தை முழுமையாக விட்டு விட்டு சைவத்திற்கு மாறிவிட்டார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.