ChatGPTயால் வேலையிழந்த டெக் கண்டெண்ட் ரைட்டர்.. நாயுடன் வாக்கிங் செல்வதாக பதிவு..!

அமெரிக்காவை சேர்ந்த டெக் கண்டெண்ட் ரைட்டர் ஒருவர் தனது வேலையை ChatGPTயால் பறிபோனதை அடுத்து தற்போது நாயுடன் வாக்கிங் செல்வதாக தனது சமூக வலைதளத்தில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ChatGPT அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பலரது வேலை வாய்ப்புகள் பறிபோகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் முன்னணி நிறுவனம் ஒன்றில் டெக் கன்டென்ட் ரைட்டர் பணியில் இருந்த அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது ஒலிவியா லிக்கின் என்பவர் ChatGPTயால் தனது வேலை மிக விரைவில் பறிபோகும் என்று தனது கருத்தை அப்போதே தெரிவித்து இருந்தார். வாஷிங்டன் போஸ்டில் அவரது கட்டுரை வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவரது மேலாளர்கள் ஒலிவியாவுக்கு பதிலாகChatGPTயிடம் கண்டன்டுகளை பெற்றுக் கொண்டதாகவும் தன்னுடைய பணி குறைந்து கொண்டே வருவதை பார்த்த அவர் கூடிய விரைவில் தனது வேலை பறிபோகும் என்று நினைத்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய வேலை பறிபோனதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு முழு நேர கண்டெண்ட் ரைடருக்கு சம்பளம் கொடுப்பதை விட சாட்ஜிபிடிஐ பயன்படுத்துவது மலிவானது என்று அவரது மேலாளர் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருப்பதாகவும் என்னை போன்ற பலர் செயற்கை நுண்ணறிவு செயலிகளால் வேலை இழந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார் .

இவரது பதிவு மனித வேலைகளின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது. ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு பல மனிதர்கள் செய்யும் வேலையை ஒரு சில நிமிடங்களில் முடித்து விடுகிறது என்பதால் எதிர்காலத்தில் வேலை இழப்பு என்பது மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முழுக்க முழுக்க இயந்திரங்களால் வேலை செய்யப்படும் அபாயம் மாறக்கூடும் என்றும் இதனால் தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews