இன்னமும் டெல்லி பிடியில் தான் அதிமுக உள்ளது.. டெல்லி தான் எல்லா திட்டத்தையும் போட்டு கொடுக்குது.. இப்படியே போனால் அதிமுகவே இல்லாமல் போகும்…

தவெகவுக்கு போக வேண்டாம்.. போனாலும் அங்க மரியாதை இருக்காது.. எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து தூக்குவோம், முடியலைன்னா தனி அதிமுக அணி ஒன்னு ஆரம்பிப்போம்.. டெல்லி இதைத்தான் சொல்லியிருக்கும்.. அமித்ஷா, புஸ்ஸி ஆனந்த் ,…

sp velumani

தவெகவுக்கு போக வேண்டாம்.. போனாலும் அங்க மரியாதை இருக்காது.. எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து தூக்குவோம், முடியலைன்னா தனி அதிமுக அணி ஒன்னு ஆரம்பிப்போம்.. டெல்லி இதைத்தான் சொல்லியிருக்கும்.. அமித்ஷா, புஸ்ஸி ஆனந்த் , சபாநாயகரை சந்தித்த பின் வேலுமணி டீமின் மாஸ் திட்டம் இதுதான்..

தமிழக அரசியலில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு எதிராக மற்றொரு பெரிய பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் கடந்த வாரம் டெல்லிக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தாங்கள் அனைவரும் தவெகவில் ஐக்கியமாகிவிடுவோம் என்றும் அவர்கள் வெளிப்படையாகவே நெருக்கடி கொடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

டெல்லி சென்ற வேலுமணி டீமின் இந்தக் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர்களிடமிருந்து உடனடியான ஒப்புதல் கிடைக்கவில்லை மாறாக ஒரு தந்திரமான அறிவுரையே வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் போய் இணைவதை விட, இப்போதைய சூழலில் சட்டமன்றத்திற்குள் தனித்து நின்று ஒரு போட்டி அதிமுக அணியை உங்களால் உருவாக்க முடியுமா என்று பரிசோதித்துப் பாருங்கள் என்று டெல்லி தரப்பு அவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பியுள்ளது. இந்த ஆலோசனையைத் தீவிரமாக எடுத்துக்கொண்ட வேலுமணி தரப்பு, உடனடியாகத் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தமிழக சட்டமன்றத்திற்குள்ளும் களத்திலும் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது.

டெல்லியின் இந்த அறிவுரைக்கும் தலைமைச் செயலகமான கோட்டை சந்திப்புக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. சட்டமன்றத்தில் தங்களை ஒரு தனி அணியாகக் கருத வேண்டும் என்றும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களில் பேச தங்களுக்கும் தனி வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்துப் பேசிய வேலுமணி ஆதரவு அணியினர், தங்களின் அடுத்த நகர்வு குறித்த ஆலோசனைகளையும் மேற்கொண்டதாகத் தெரிகிறது. கோட்டையில் எழுந்துள்ள இந்த திடீர் திருப்பம் ஆளுங்கட்சி வட்டாரத்திலும் எதிர்க்கட்சி முகாமிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த அரசியல் சந்திப்புகளுக்குப் பின்னர், அரசியல் வட்டாரத்தில் மிகவும் அறியப்பட்ட லீமா ரோஸ் மார்ட்டினும் அமைச்சர் ஆனந்துடன் ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கட்சிக்குள் ஒரு பலமான போர்க்கொடியை உயர்த்த வேலுமணி தரப்பு திட்டமிட்டு வருவது தெளிவாகிறது. ‘உண்மையான அதிமுக நாங்கள்தான்’ என்ற ஒற்றைக் கோஷத்தை முன்னிறுத்தி, அடிமட்டத் தொண்டர்களைத் திரட்டி கட்சிக்குள் ஒரு மாபெரும் பிரளயத்தை உருவாக்க அவர்கள் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த நகர்வுகள் அதிமுகவின் தற்போதைய அதிகார மையத்தை உலுக்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றன.

கட்சித் தலைமைக்குத் தெரியாமல் மற்றும் எடப்பாடியின் கட்டுப்பாட்டை மீறி இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளில் வேலுமணி அணி இறங்கியிருப்பது அதிமுகவின் உள்கட்சிப் பூசலை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏற்கனவே பல தேர்தல்களிலும் தோல்விகளைச் சந்தித்து, பலவீனமான எதிர்க்கட்சியாக முடங்கிப் போய் கிடக்கும் அதிமுகவிற்குள் இந்தச் புதிய மோதல் மேலும் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு போட்டி அரசாங்கம் அல்லது போட்டி அணிகளாகச் செயல்படத் தொடங்கும் இந்தத் போக்கு, கட்சித் தொண்டர்களைக் கடுமையான குழப்பத்திற்கும் விரக்திக்கும் ஆளாக்கியுள்ளது.

வரும் நாட்களில் இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் பல எதிர்பாராத திருப்பங்களை உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியின் பிடியிலிருந்து கட்சியின் முழுமையான அதிகாரத்தைக் கைப்பற்ற வேலுமணி தரப்பு போடும் இந்தத் தந்திரமான கணக்குகள் எந்த அளவுக்கு எடுபடும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டெல்லியின் ஆசியோடு அரங்கேறிவரும் இந்தச் சதித் திட்டங்கள் அதிமுகவின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அபாயம் உள்ளதால், ஒட்டுமொத்த தமிழக அரசியலும் இந்தச் சூழ்ச்சிகளை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.