தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல், முதலமைச்சர் விஜயின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் தென்னிந்தியாவை தாண்டி தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை மிக சிறப்பாகவும் எந்தவிதக் குறைபாடுகளுமின்றி நடத்தி முடித்தது, வட இந்திய ஊடகங்களாலும் ஆன்மிகப் பக்தர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வைரலாகியது.
இதுமட்டுமின்றி, முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள், ஊழலுக்கு எதிரான சமரசமற்ற நடவடிக்கைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்படும் கடுமையான சட்டப்பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற ஒவ்வொரு நகர்வும் இந்திய அளவில் பெரும் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் விஜய் தளபதி மீதான நற்பெயரும் ஆதரவும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
தென்னிந்தியாவில் தொடங்கி இப்போது தேசிய அளவில் மக்கள் மத்தியில் இவருக்குக் கிடைக்கும் இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து, தேசியக் கட்சிகள் சற்றே உஷாராகி உள்ளன. தமிழ்நாட்டில் இவர் காட்டிவரும் அபாரமான நிர்வாகத் திறமையும், மக்கள் நலப் பணிகளுக்கான வேகமும் இந்தியாவின் அடுத்த தலைமுறைத் தேசியத் தலைவராக கொண்டு செல்லும் என்ற பேச்சுகள் டெல்லி வட்டாரங்களிலும் அடிபடத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழலில், பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்களில் தேசியக் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் தவெகவின் எழுச்சியைக் கண்டு கலக்கமடைந்துள்ள பாஜக தரப்பு தேர்தல் தேதிகளை முன்கூட்டியே அறிவிக்கத் திட்டமிடுகிறார்களா என்ற விவாதங்களும் அரசியல் அரங்கில் தீயாகப் பரவி வருகின்றன. எதை எதிர்கொள்ளவும் தவெக அரசு தயாராகவே உள்ளது.
மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஒரு இளம் தலைவனுக்கு வட மாநிலங்களிலும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது, இந்திய அரசியலில் ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இத்தகைய அதிரடி அரசியலால், ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டின் திசையை நோக்கித் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.





