தமிழ் திரையுலகின் தரமான தயாரிப்பாளர்.. சாண்டோ சின்னப்பா தேவரின் அறியாத பக்கங்கள்..!

தமிழ் திரை உலகில் தரமான பல திரைப்படங்களை தயாரித்தவர்களில் ஒருவர்தான் சாண்டோ சின்னப்பா தேவர். ஆரம்ப காலத்தில் இவர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த நிலையில் அதன் பின் தயாரிப்பாளராக மாறினார். இவர் தயாரித்த முதல் திரைப்படம் எம்ஜிஆர் நடித்த தாய்க்குப் பின் தாரம் என்பது தான்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் எம்.ஜி.ஆரை வைத்து தொடர்ந்து படங்கள் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் எம்ஜிஆர் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் சின்னப்பா தேவர் நீலமலைத் திருடன், செங்கோட்டை சிங்கம், வாழ வைத்த தெய்வம், உத்தமி பெற்ற ரத்தினம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.

மாதம் 10 ரூபாய் சம்பளத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர்.. திரையுலகை திரும்பி பார்க்க வைத்த ஓ.ஏ.கே தேவர்..!

அதன் பின் மீண்டும் எம்ஜிஆரை வைத்து அவர் படங்கள் தயாரிக்க தொடங்கினார். தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம், வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், விவசாயி, தேர்த்திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம் உள்ளிட்ட படங்களை தயாரித்தார். நல்ல நேரம் படம் தான் தேவர் மற்றும் எம்ஜிஆர் இணைந்த கடைசி படம்.

இதன் பிறகும் தெய்வம் கோமாதா என் குலமாதா, வெள்ளிக்கிழமை விரதம், போன்ற சாமி படங்களை தயாரித்தார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களையும் தயாரித்து உள்ளார்.

16 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 17 வயதில் எம்ஜிஆருக்கு ஜோடி.. நடிகை மஞ்சுளாவின் திரைப் பக்கங்கள்..!!

தேவர் பிலிம்ஸ் , தண்டாயுதபாணி பிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களை அவர் நடத்தி அதில் ஏராளமான படங்களை தயாரித்தார். சின்னப்பா தேவர், மாரி முத்தம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு தண்டாயுதபாணி என்ற மகனும் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய மகள்களும் இருந்தனர். தேவரின் மகள் சுப்புலட்சுமி தான் பிரபல இயக்குனர் தியாகராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தேவர் பிலிம்ஸ் தயாரித்த ஆட்டுக்கார அலமேலு உள்பட பல திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

தேவரின் மறைவிற்கு பின்னர் தேவர் பிலிம்ஸ் பல திரைப்படங்களை தயாரித்தது. குறிப்பாக கமல், ரஜினி நடித்த தாயில்லாமல் நானில்லை ரஜினிகாந்த் நடித்த அன்னை ஒரு ஆலயம் கமல்ஹாசன் நடித்த ராம் லட்சுமணன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தது. அதேபோல் ரஜினிகாந்த் நடித்த தாய் வீடு விஜயகாந்த் நடித்த 3டி படமான அன்னை பூமி போன்ற படங்கள் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

நடந்து வந்தாலே நகைச்சுவை.. நடிகர் உசிலைமணியின் திரைப்பயணம்..!!

கடந்த 1988 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி பிலிம்ஸ் பொருளாதார பிரச்சினையில் இருந்த நிலையில் ரஜினிகாந்த் அந்த நிறுவனத்திற்கு தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தில் மிகவும் குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார். இந்த படம் நல்ல லாபம் பெற்ற நிலையில் அத்துடன் தேவர் பிலிம்ஸ், தண்டாயுதபாணி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிப்பை நிறுத்திக் கொண்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...