படுக்கையில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்த எம்ஜிஆர்-சிவாஜி பட நடிகை..!

எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்கள் உடன் நடித்த நடிகை மஞ்சுளா தனது இறுதி காலத்தில் படுக்கையில் இருந்து தவறி விழுந்ததால் காலமான சோக சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகை மஞ்சுளா 16 வயதில் சினிமாவில் அறிமுகமானார். ’சாந்தி நிலையம்’ என்ற திரைப்படத்தில் அவர் சின்ன பெண்ணாக நடித்திருந்தார். அவரது துறுதுறு நடிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.

நடித்தது 9 படங்கள்.. 9ம் சூப்பர்ஹிட்.. திடீரென காணாமல் போன கோடீஸ்வரரின் மகன் நடிகர்..!

இதனை அடுத்து அவர் அடுத்த ஆண்டிலேயே ’ரிக்சாக்காரன்’ என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி என மாறி மாறி அவர் பல படங்களில் நடித்தார். அதேபோல் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உட்பட பல நடிகர்களுடன் நடித்தார்.

manjula vijayakumar1

எம்ஜிஆர் உடன் அவர் நடித்த ’உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் இன்றளவும் மிகப் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் நடிகர் விஜயகுமாரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் இரண்டாவது மனைவியாக அவர் இருக்க ஒப்புக் கொண்டார் என்பதும் அவருக்கு பிறந்த மகள்கள் தான் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மஞ்சுளாவின் அக்கா மகள்கள் தான் தொலைக்காட்சி நடிகை சிந்து மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சஞ்சய் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரிந்ததே.

திருமணத்திற்கு பின் ஒரே ஒரு படம் தான்.. திரையுலகில் இருந்து ஷாலினி விலக இதுதான் காரணமா?

நடிகை மஞ்சுளா திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்தார். குறிப்பாக அவர் நடித்த ’சேரன் பாண்டியன்’ என்ற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் பேரையும் புகழையும் பெற்று தந்தது.

இந்த நிலையில்தான் 2013 ஆம் ஆண்டு அவர் கிட்னி கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவர் கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் படுகாயம் அடைந்தார் என்றும் அதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி காலமானதாகவும் கூறப்பட்டது. மஞ்சுளாவின் மரணத்திற்கு ரஜினி, கமல் உள்பட பல திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மரணம் அடைந்தபோது 2 மாத கர்ப்பம்.. தென்னிந்திய பிரபல நடிகையின் சோக முடிவு..!

எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல பிரபலங்களுடன் நடித்த, திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற மஞ்சுளாவின் வாழ்க்கை சோகத்தில் முடிந்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews