நீ இந்தப் பாட்டுக்குத் தான் லாயக்கு… தூற்றியவர்கள் முன் ஹைபிட்சில் பாடல் பாடி பதிலடி கொடுத்த சைந்தவி..

இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாபிக்காக இருப்பவர்கள் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதியினர் தான். இருவரும் தங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் பிரிவதாக அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழ்த்திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இணைபிரியாத தம்பதிகளாய் காதலால் கசிந்துருகி மணம் முடித்தவர்களின் பிரிவானது ரசிகர்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பாடகியான சைந்தவி பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். குறிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையிலேயே நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். சிறு வயதிலிருந்தே முறைப்படி சங்கீதம் கற்று தனது 12 வயதிலிருந்து பாட ஆரம்பித்திருக்கிறார். பெரும்பாலும் கர்நாடக இசை கச்சேரிகளில் பாடியவருக்கு அவர் மெலடி மற்றும் கர்நாடக இசை குறித்த பாடல்களைத் தான் பாடுவார் என்ற முத்திரை அவர் மீது விழுந்தது. ஹைபிட்ச் பாடல்கள் உனக்குப் பாட வராது என அவர்மீது எதிர்மறை விமர்சனங்கள் விழுந்தன.

நடிகர் திலகத்தை விட அதிகமாக சம்பளம் வாங்கிய சந்திரபாபு.. எந்தப் படத்துக்கு தெரியுமா?

இதனால் தனக்கு இந்த மாதிரி பாடல்தான் பாட வருமோ என மனதிற்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்திருக்கிறார். ஆனால் இதனை உடைத்தவர் அவரின் பயிற்சியாளர் அகஸ்டின் என்ற இசை பயிற்றுநர் தான். இதனையடுத்து அவருக்கு முதன்முதலாக வந்த பாடல்வாய்ப்புதான் அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டக்காக்கா கொண்டக் காரி பாடல்.. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்தப் பாடல்தான் சைந்தவியை மூலை முடுக்கெல்லாம் அடையாளம் காட்டியது.

அவருடன் சேர்ந்து ஜாஸிகிப்ட், கே.கே., ஸ்ரேயா கோஷல் என 3 பாடகர்கள் பாடியிருந்தாலும் இவர் மட்டுமே தமிழ் பேசும் பெண் என்பதால் அப்போது இந்தப் பாடல் வெளியான போது அனைத்து மீடியாக்களும் சைந்தவியைக் கொண்டாட புகழின் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்.

இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டு கழித்தே வெளிவந்தது. அந்நியன் பாடல் ஹிட்டைத் தொடர்ந்து பல இசையமைப்பாளர்கள் சைந்தவியின் குரலைப் பயன்படுத்தத் தொடங்கினர். தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், மணிசர்மா, ஜி.வி.பிரகாஷ்குமார், யுவன் போன்ற பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடத் தொடங்கினார் சைந்தவி. இவர் பாடிய பாடல்கள் பெரும்பாலும் ஹிட் லிஸ்டில் சேர தமிழின் முன்னனி பாடகிகளில் ஒருவராக சைந்தவி தற்போது வலம் வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...