சிம்புவின் அதிரடி மாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா? உலகநாயகன் கமல்… நடந்தது இதுதான்..!

தமிழ்த்திரை உலகில் STR என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த காலங்களில் அவ்வளவாக பேசப்படவில்லை. அவரது படங்கள் வரும்போது மட்டும் பேசுவார்கள். ஆனால் கமலுடன் நடித்ததும் நடித்தார். எப்போ பார்த்தாலும் மீடியாக்களைப் பார்த்தாலே சிம்பு பற்றிய பேச்சு தான். தக் லைஃப் படத்தில் மிரட்டப் போகிறார்.

சமீபத்தில் டிப்டாப் போலீஸ் கெட்டப்பில் கையில் கன் வைத்தபடி ஜீப்பில் ‘சரட்’டென்று பாலைவனத்தில் வந்து புழுதியைக் கிளப்பியபடி இன்ட்ரோவைக் கொடுத்த வீடியோ வெளியானது. ரசிகர்களுக்கு சிம்பு மீதான கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அது தவிர கமலுடன் கைகோர்க்கிறார். அப்பா, மகன் உறவில் இருவரும் வருவதால் படத்தில் நாயகன் போல மீண்டும் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏன்னா இயக்குனர் மணிரத்னம்.

STR, Kamal
STR, Kamal

நாயகன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் தான் கமலுடன் இணைந்துள்ளார். அது தவிர சிம்பு மீது திரையுலகில் இருந்து வந்த அவப்பெயர்கள் அத்தனையும் இந்த ஒரே படத்தோடு மாறிவிடப் போகிறதாம். அவரைப் பார்த்து மற்ற நடிகர்கள் நிறைய கற்றுக் கொள்ளும் வகையில் பெரிய பெர்பக்ஷனிஸ்டாகி விட்டாராம் சிம்பு. இந்த அதிரடியான மாற்றத்திற்கு யார் காரணம்? என்ன நடந்தது என்று பார்ப்போம்.

உலகநாயகன் கமல், சிம்பு இருவரும் இணைந்து நடித்து வரும் படம் தக் லைஃப். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்த படத்திற்கான சூட்டிங் நடந்ததாம். தந்தை மகன் உறவு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இந்தப்படத்திற்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறாராம்.

சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர காரணம் கமல் தான். ரொம்ப பெர்பக்ஷனிஸ்டா மாறினதுக்கும் இவர் தான் காரணம். உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து அவருக்கு அட்வைஸ் பண்ணினார்களாம். டி.ராஜேந்தருக்கு அமெரிக்காவில் சென்று சிகிச்சை எடுக்க சிம்புவுக்கு ஆலோசனை சொன்னாராம் கமல்.

அதற்கு வேண்டிய அத்தனை உதவியையும் செய்து தருவதாகவும் உறுதி அளித்துள்ளார் கமல். அதே நேரம் உதயநிதி ஸ்டாலினும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தாராம்.

இந்தியன் 2 படத்திற்கான டிரெய்லர் இந்த மாதம் கடைசியில் வர வாய்ப்புள்ளது. ஆடியோ லாஞ்சிற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...