பாலிவுட்டில் வெற்றி பெற்ற முதல் தமிழ் நடிகை.. வைஜெயந்திமாலாவின் வெற்றிப்பயணம்!

ஸ்ரீதேவி உள்பட பல தமிழ் நடிகைகள் பாலிவுட் சென்று வெற்றி பெற்றிருந்தாலும் முதல் முதலாக தமிழ் நடிகை பாலிவுட் சென்று நம்பர் ஒன் நடிகையாக மாறினார் என்றால் அவர்தான் வைஜெயந்திமாலா. சென்னை திருவல்லிக்கேணியில் 1936 ஆம் ஆண்டு வைஜெயந்திமாலா பிறந்தார். இவரது தாயார் வசுந்தரா தேவியும் ஒரு நடிகை தான்.

சிவாஜி கணேசன் நடித்த இரும்புத்திரை படத்தில் வைஜெயந்திமாலாவும் அவரது அம்மாவும் இணைந்து நடித்திருப்பார்கள். நடிகை வைஜெயந்திமாலா சிறுவயதிலேயே நடனம் நாட்டியம் சங்கீதம் ஆகியவற்றை முறையாக படித்தார். சென்னை சர்ச் பார்க்கில் படித்த அவர் 13 வயதில் நடன அரங்கேற்றம் செய்தார்.

அந்த நடன அரங்கேற்றத்தில் ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் மெய்யப்ப செட்டியார் கலந்து கொண்ட நிலையில் அவர்கள் தயாரிக்க இருக்கும் திரைப்படத்தில் வைஜெயந்திமாலாவை நாயகியாக்க முடிவு செய்தனர். வைஜெயந்திமாலா பெற்றோரிடம் அவர்கள் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்திய போது அவர்கள்  கொஞ்சம் தயங்கினார்.

விபத்தில் கால் இழந்தாலும் நடனக்கலையில் சாதனை.. திரையுலகிலும் சாதனை செய்த நடிகை..!

ஏனென்றால் அப்போது வைஜெயந்திமாலாவுக்கு வெறும் 16 வயது தான் ஆகி இருந்தது. இருப்பினும் அவரது பாட்டி ஒப்புதல் கொடுத்ததால் பெற்றோரும் அவர் நடிக்க அனுமதித்தனர். அந்த படம் தான் வாழ்க்கை. இந்த படத்தில் வைஜெயந்திமாலா நாயகியாக நடித்தார். 1949 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்த நிலையில் இந்த படம் தமிழில் வெற்றி பெற்றதால் தெலுங்கிலும் ஹிந்தியிலும் ஏவிஎம் உருவாக்கினார்கள். இந்த படம் ஹிந்தியில் பாகார் என்ற தலைப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஹிந்தியிலும் வைஜெயந்திமாலா தான் நடித்திருந்தார்.

அந்த காலத்தில் ஹிந்தியில் பிரபலமாக இருந்த நர்கீஸ் உள்பட பல முன்னணி நடிகைகளை 17 வயதிலேயே வைஜெயந்திமாலா பின்னுக்கு தள்ளினார். வாழ்க்கை என்ற தமிழ் படத்தில் வைஜெயந்திமாலா அறிமுகமானாலும் தெலுங்கிலும், ஹிந்தியிலும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்ததால் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்தார். அவ்வப்போது பெண் உள்பட ஒரு சில தமிழ் படங்களில் மட்டும் அவர் நடித்தார்.

பாலிவுட்டில் அறிமுகமான ஒரு சில ஆண்டுகளில் அவர் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். திலீப்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.  அவர் நடித்த நியூ டெல்லி என்ற திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டது.

டீச்சர் என்றாலே இவங்க தான்… கடலோர கவிதைகள் ரேகா… பாரதிராஜாவால் ஜொலித்த நடிகை….!!

கிட்டத்தட்ட அவர் பத்து வருடங்கள் ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்த நிலையில் மீண்டும் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்த படம் என்றால் அது வஞ்சிக்கோட்டை வாலிபன் என்று சொல்லலாம். ஜெமினி கணேசன், பத்மினி முக்கிய கேரக்டர்களில் நடித்த இந்த படத்தில் வைஜெயந்திமாலாவுக்கும் முக்கிய கேரக்டர் தான்.

இந்த படத்தில் வைஜெயந்திமாலா மற்றும் பத்மினி இடையே நடக்கும் நடன போட்டி மிகப் பெரிய அளவில் பிரபலம். இந்த நிலையில் எம்ஜிஆருடன் அவர் நடித்த திரைப்படம் பாக்தாத் திருடன் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்பது மட்டுமின்றி எம்ஜிஆர் உடன் இவர் நடித்த ஒரே படம் என்றும் கூறலாம்.

இந்த நிலையில் கடந்த 1968 ஆம் ஆண்டு சமன்லால் பாலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சுசீந்திர பாலி என்ற மகன் உள்ளார். 1989 ஆம் ஆண்டு கணவர் பாலி இறந்தவுடன் அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டு சென்னையிலேயே வாழ்ந்து வந்தார்.

ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

அதன் பிறகு அவர் அரசியலில் ஈடுபட தொடங்கினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர் 1984 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆலடி அருணாவை தோற்கடித்தார். அதன் பிறகு அவர் ராஜ்யசபா எம்பி ஆகவும் மாறினார். ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews