Tag: vijay

vijay chidambaram

தவெகவின் முதல் பட்ஜெட்டின் பின்னணியில் ப சிதம்பரம், மான்டெக் சிங் அலுவாலியா.. பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகள், அனுபவங்களுடன் கூடிய பட்ஜெட்.. ஈகோ பார்க்காமல் நிதியமைச்சர் பல்வேறு தரப்புடன் ஆலோசித்தபின் தயாரித்த பட்ஜெட்.. வருவாயை அதிகரிக்க, செலவை குறைக்க, ஊழல் ஓட்டையை அடைக்க என பல்வேறு முயற்சிகள் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.. ஒரே பட்ஜெட்டை அனைத்து மாற்றமும் நடக்காது, ஆனால் மாற்றத்திற்கான அறிகுறி இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.. தமிழ்நாடு பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் நாள், கடனே இல்லாத நாள் வெகுதூரத்தில் இல்லை…

ஆகஸ்ட் 6, 2026, 20:00
vijay budget

தவெகவின் முதல் பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட் என்கிறார் முக ஸ்டாலின்.. ஆனால் உண்மையில் இது பூஜ்ஜிய பட்ஜெட் அல்ல.. மக்களின் ராஜ்ஜிய பட்ஜெட்.. கடன் வாங்குவதை குறைக்கும் பட்ஜெட்.. கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் பட்ஜெட்.. ஜென் சி இளைஞர்களால் பாராட்டப்படும் பட்ஜெட்.. காமராஜர் காலத்திய பட்ஜெட்டை ஞாபகப்படுத்தும் பட்ஜெட்.. எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் அரசியல் செய்யட்டும், நாம வழக்கம்போல் மக்களுக்கு நல்லது செய்வோம் என்ற எண்ணத்துடன் தயாரிக்கப்பட்ட பட்ஜெட்

ஆகஸ்ட் 6, 2026, 11:45
karunanidhi vs udhayanidhi

கருணாநிதி கைதுக்கும் உதயநிதி கைதுக்கும் என்ன வித்தியாசம்.. நள்ளிரவு தூங்கி கொண்டிருந்தவரை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தால் அது அராஜகம்.. காலை 10 மணிக்கு வந்து முறைப்படி ஆர்டரை கொடுத்து விளக்கம் அளித்து, வழக்கறிஞர்களையும் சமாளித்து அவர்களின் சம்மதத்தோடு கைது செய்தால் அதுதான் முறை.. கருணாநிதியின் கைது அரசியல்மயமானது.. உதயநிதியின் கைது ஆபாச பேச்சினால் வந்தது.. கருணாநிதி கைதை மக்கள் கண்டித்தனர்.. உதயநிதி கைதை மக்கள் கொண்டாடினர்…

ஆகஸ்ட் 6, 2026, 08:03
vijay vs suba

கொள்கை இல்லையாம்.. கோட்பாடு இல்லையாம்.. ஒரு போராட்டமும் நடத்தவில்லையாம்.. ஒருநாள் கூட அரசியல்ரீதியாக சிறை செல்லவில்லையாம்.. நேரடியாம முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டாராம் விஜய்.. சுப வீரபாண்டியன் வயிற்றெரிச்சல்.. சரி இத்தனையும் இருந்து ஆட்சி செய்தவர்கள் மக்களுக்கு செய்தது என்ன? மக்கள் பணத்தை ஆட்டைய போட்டது தவிர அவர்கள் செய்த ஒரே ஒரு நல்ல விசயத்தை சொல்லுங்கள்.. விஜய் ஒன்றும் ஈபிஎஸ் போல ஆக்சிடெண்டில் முதல்வராகவில்லை.. முறைப்படி தேர்தலில் ஜெயித்து முதல்வராகியுள்ளார்.. வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை வயிற்றெரிச்சல் இல்லாமல் இருங்கள்..

ஆகஸ்ட் 4, 2026, 07:59
next pm

பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றிமுகம்.. மாற்றத்தை நோக்கி செல்கிறார்களா இந்திய வாக்காளர்கள்.. பாஜக சாம்ராஜ்யம் அவ்வளவு தானா? ஜென் சி இளைஞர்களை பகைத்து கொண்டாரா பிரதமர் மோடி? புதிய பிரதமரை தேடுகிறதா இந்திய ஜென்சி கூட்டம்.. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி போட்டியில் இருப்பதாக தகவல்.. இன்னொரு சுவாரஸ்யம் இந்த பட்டியலில் நம்ம முதல்வர் விஜய்யும் இருக்காராம்.. 2029 தேர்தல் செம்ம டஃப் தான் போல…

ஆகஸ்ட் 3, 2026, 16:40
Rajini and Vijay

சிஸ்டம் கெட்டு போச்சுன்னு புலம்பிகிட்டு அதை சரி செய்யும் துணிச்சல் இல்லாதவங்க எல்லாம் சூப்பர்ஸ்டாரா? அந்த சிஸ்டத்தை சரி செய்து காட்டுகிறேன் என்று களத்தில் இறங்கிய நம்ம முதல்வர் விஜய் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.. சரி செய்து காட்டியும் வருகிறார்.. விலகி இருந்து புலம்புவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி களைகளை அறுக்கும் பணியை தைரியமாக செய்து வருகிறார் விஜய்.. விஜய் வந்தால் என்ன மாற்றம் நடக்கும்ன்னு கேட்டிங்களே.. இதுதாண்டா உண்மையான மாற்றம்…

ஆகஸ்ட் 2, 2026, 22:30
jason sanjay

அப்பா, அம்மாவை சேர்த்து வைத்திருவார் போல ஜேசன் சஞ்சய்.. டிடியின் பேட்டியில் அப்பாவை ஒரு இடத்தில் கூட விட்டுக்கொடுக்கவில்லை.. அப்பா விஜய் முதல்வரானதால் எனக்கும் என் தங்கைக்கும் ரொம்ப பொறுப்பு வந்துருக்குன்னு சொன்ன மெச்சூரிட்டி.. இந்த சின்ன வயசில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? அப்பா, அம்மாவை ஜேசன் சேர்த்து வைத்துவிட்டால் அது எத்தனையோ பேருக்கு சந்தோஷம் தரும்.. காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

ஆகஸ்ட் 1, 2026, 19:26
seeman vs vijay34

தமிழ் தேசியத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறார் சீமான்.. திமுகவுடன் சமரசம் செய்து கொண்டால் 100% விலகிவிடுவார்.. அந்த தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறாரா விஜய்? நானும் தமிழ் தேசியம் ஆதரவாளன் என காட்டி கொள்ள விரும்புகிறாரா? தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பல திட்டங்கள் வைத்திருக்கிறார் முதல்வர் விஜய்.. இந்த 5 ஆண்டுகளில் அவருடைய 30 ஆண்டு கனவும் நனவாகிவிடும்…

ஆகஸ்ட் 1, 2026, 11:55
senthil balaji bail

செந்தில் பாலாஜியை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை.. ஆனால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.. விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் வர வேண்டும்.. சாட்சியை கலைக்க கூடாது என பல நிபந்தனைகள்.. ஆனால் செந்தில் பாலாஜிக்கு இந்த உத்தரவு சற்று நிம்மதி தான்.. விஜய் அரசின் 2வது பாலிலும் சிக்சர் அடித்துவிட்டார்.. அடுத்து அவரை போல்டாக்க விஜய்யின் திட்டம் என்னவாக இருக்கும்?

ஜூலை 31, 2026, 16:26
kamal rajini vijayakanth vijay

கருணாநிதி, ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ரஜினி, கமல் உள்பட கட்சி ஆரம்பிக்க யாருக்கும் தைரியம் வரவில்லை.. விஜய்காந்த் மட்டுமே தைரியமாக கட்சி ஆரம்பித்து போராடினார்.. 2021-2026 திமுக ஆட்சியின்போது தனுஷ்க்கு ஏன் கட்சி ஆரம்பிக்க தைரியம் வரவில்லை.. விஜய் மட்டுமே கட்சி ஆரம்பித்து திமுக அரசு கொடுத்த தொல்லைகளையும் தாண்டி ஆட்சி அமைத்து முதல்வரானார்.. விஜயகாந்த், விஜய் தைரியம் ரஜினி, கமலுக்கு கூட இல்லை.. அரசியலில் தைரியம் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..

ஜூலை 31, 2026, 11:15