விஜய்க்கு இணையாக சோஷியல் மீடியா பலம், விர்ச்சுவல் வாரியர்ஸ் வைத்திருக்கும் ஒரே நபர் அஜித் தான்.. அஜித் ஒருவேளை அரசியலில் இறங்கினால் மட்டுமே விஜய்யை வீழ்த்த முடியும்.. ஆனால் அஜித் தனது நண்பர் விஜய்யை எதிர்க்க யோசிக்க கூட மாட்டார்.. அவர் இப்போது சினிமாவில் கூட இல்லை.. பைக், கார் என பாதை மாறிவிட்டார்… ஆனால் அவரை அரசியலில் இழுத்து போட ஒரு பெரிய கூட்டமே முயற்சிக்குது.. ஆனால் அஜித் கழுவுற மீனில் நழுவுற மீன்.. அரசியலுக்கு வந்தால் நிம்மதி, குடும்ப சந்தோஷம் போய்விடும் என்பது தெரியும்.. எனவே அஜித் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்…ஜூலை 30, 2026, 12:30
எம்ஜிஆரும் விஜய்யும் தன்னெழுச்சியாக அரசியலுக்கு வந்தவர்கள்.. மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவர்கள்.. திரையுலகின் உச்சத்தை விட்டு வந்தவர்கள்.. அதனால் வெற்றி பெற்றார்கள்.. மற்ற நடிகர்கள் எம்ஜிஆர் மீதும், விஜய் மீதும் உள்ள பொறாமையால் அரசியலுக்கு வருகிறார்கள்.. சில ஆண்டுகளில் காணாமல் போகிறார்கள்.. இதுதான் எம்ஜிஆர்- விஜய் அரசியலுக்கும் மற்ற நடிகர்ளின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்… தனுஷ் இதை புரிந்து கொள்வாரா? தோல்விக்கு பின் தாமதமாக புரிந்து கொள்வார்…ஜூலை 30, 2026, 08:20
தமிழ்நாட்டுல ரெண்டே ரெண்டு நடிகர்கள் தான் ஆட்சியை பிடிச்சாங்க.. எம்ஜிஆரின் வெற்றிய பார்த்து பொறாமைப்பட்ட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தாங்க.. ஆனால் தாக்கு பிடிக்க முடியலை.. சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த் என பட்டியலை சொல்லி கொண்டே போகலாம்.. ஆனால் அவங்களால முடியாததை விஜய் செய்து காட்டியுள்ளார். அதுவும் 50 ஆண்டுகள் கழிச்சி.. இன்னொரு நடிகர் ஆட்சியை பிடிக்கனும்ன்னா இன்னொரு 50 வருஷம் வெயிட் பண்ணனும்…ஜூலை 29, 2026, 17:59
ரஜினியின் ஆன்மீக அரசியல் ஆரம்பிக்காமலேயே முடிந்துவிட்டது.. கமல்ஹாசனின் பகுத்தறிவு அரசியலும் பல்லிளித்துவிட்டது.. விஷாலின் அரசியல் ஆசை ஆர்.கே.நகருடன் முடிந்துவிட்டது.. அரசியலிலுக்கு வந்து பணம் செலவழிக்க சூர்யாவுக்கு மனசு இருக்காது.. ஆக மொத்தம் திரையில் மட்டும் தான் மாஸ்.. நடைமுறை சிக்கல் வந்தால் அதை எதிர்க்க கூட தைரியம் இருக்காது.. ஆனால் விஜய் அப்படி அல்ல.. ஜெயலலிதாவையும் சமாளித்தார், கருணாநிதியையும் சமாளித்தார்.. ஸ்டாலினை வீழ்த்தினார்.. உதயநிதியை சட்டைசெய்யவே இல்லை.. இதுதான் உண்மையான மாஸ்.. இப்படி ஒருவர் இனிமேல் திரையுலகில் இருந்து வர வாய்ப்பே இல்லை…ஜூலை 29, 2026, 17:10
தனுஷ் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை.. அவருடைய உயரம் அவருக்கு தெரியும்.. ஆனால் ஏன் தனுஷ் பில்டப் செய்கிறார்.. அங்கே தான் அவருடைய தந்திரம்.. தொடர் தோல்விகளில் இருந்து மீட்க, பிரேக்கிங் நியூசில் இடம் பெற செய்யும் தந்திரம்.. இதை தான் ரஜினி 30 ஆண்டுகள் செய்தார்.. அதே பாதையை இப்போது தனுஷ் பின்பற்றுகிறார்.. அரசியலுக்கு வருவதாக பில்டப் செய்து தனது திரையுலக தோல்வியில் இருந்து மீள நினைக்கிறாரா தனுஷ்?ஜூலை 29, 2026, 16:01
அரசு வேலை போனால் போகுது, எங்கள் விஜய் நல்லா இருந்தா போதும். . கண்டிப்பா அவர் எங்களை ஏமாற்ற மாட்டார்.. எங்களுக்காக சொந்த பணத்திலாவது எதாவது செய்வார்.. இப்படி ஒரு வெறித்தனமான அன்பு வைத்திருக்கும் மக்களை எப்படிடா விஜய் கிட்ட இருந்து பிரிப்பீங்க… மறுபடியும் மறுபடியும் சொல்றோம்.. விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல.. அவர் ஒவ்வொரு வீட்டின் ஒரு உறுப்பினர்.. அவரையும் தமிழ்நாட்டு மக்களையும் பிரிக்கவே முடியாது..ஜூலை 29, 2026, 13:30
சப்ஸ்டியூட்ட்டா ரெண்டு பேட்ஸ்மேன்களை இறக்கிவிடுது பாஜக.. ஒன்னு அண்ணாமலை இன்னொன்னு தனுஷ்.. ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் செஞ்சுரி அடிச்சா ஜெயிக்கலாம், இல்லைன்னா பாத்துக்கிடலாம்.. ஆனால் முதலமைச்சர் விஜய் என்கிற ஃபாஸ்ட் பவுலரிடம் ரெண்டு பேருமே டக் அவுட் ஆகிருவாங்கன்னு பாஜகவுக்கு இன்னும் புரியலை..ஜூலை 29, 2026, 12:45
விஜய்க்கு ஒரு புஸ்ஸி ஆனந்த்.. தனுஷுக்கு ஒரு சுப்பிரமணியன் சிவா.. விஜய்க்கு ஒரு ஆதவ் அர்ஜூனா.. தனுஷூக்கு ஒரு வெற்றிமாறன்.. விஜய்க்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர்.. தனுஷூக்கு ஒரு கஸ்தூரி ராஜா.. ஒப்பிடும் தனுஷ் ரசிகர்கள்.. ஆனால் விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு தனுஷூக்கு இருக்கிறதா? தனுஷின் ஒரே ஒரு படம் 200 கோடி வசூலை தாண்டியுள்ளதா? தனது படத்தை கூட வெற்றி பெற செய்ய முடியாத தனுஷ் ரசிகர்களை விஜய் ரசிகர்களுடன் ஒப்பிடலாமா? சரி ஆசை யாரை விட்டது.. வந்து பார்க்கட்டும்.. அரசியலுன்னா என்னன்னு அப்ப தெரியும்…ஜூலை 28, 2026, 21:00
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்த உச்சத்தை தொட்டது விஜய் என்ற சரித்திரம்; மத்தவங்க எல்லாம் சினிமா கவர்ச்சியை மட்டும் நம்பி வர்றவங்களுக்கு இங்க கிடைக்கிறது வெறும் ஏமாற்றம் மட்டும்தான்! ரசிகர் மன்றங்களை அன்னைக்கே நலத்திட்ட இயக்கங்களா மாத்தினோம்; அதான் இன்னைக்கு அடிமட்டத்துல இருந்து அடிச்சு தூக்க காரணமான வியூகம்!எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.. விஜய் ஆகிவிட முடியாது.. ரஜினி, கமலுக்கே செட் ஆகலைன்னா வேறு யாருக்கு செட் ஆகும்?ஜூலை 27, 2026, 11:49
ஜெயலலிதா மோடியா? லேடியான்னு சொன்னாங்க.. ஆனால் துரதிர்ஷ்டவசமா அவங்களால மோடியை வெல்ல முடியலை.. ஆனால் இப்ப மோடியா? விஜய்யான்னு சமூக வலைத்தளங்களில் அனல் பறக்குது.. விர்ச்சுவல் வாரியர்ஸ் வட இந்தியாவுல பட்டைய கிளப்புறாங்க…விஜய் குறி வச்சா இரை விழனும்.. டெல்லி இரை விழுதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..ஜூலை 21, 2026, 17:45
திமுக ஒரு மாநில கட்சி.. திமுகவுக்கு இனிமேல் ஒரே எதிரி ஜோசப் விஜய் தான்.. அதுக்கு ஏத்தபடி தான் அரசியல் செய்யனும்.. இனிமேலும் டெல்லிக்கும் எங்களுக்கும் தான் போட்டின்னு சொன்னா திமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது.. விஜய்யை எதிர்க்க யாருடனும் கூட்டணி சேரலாம்.. அது அதிமுக, பாஜகவுடன் கூட இருக்கலாம்.. அதுதான் திமுக அரசியல்..ஜூலை 18, 2026, 13:01