விஜய் – அண்ணாமலை – உதயநிதி.. இந்த மும்முனை போட்டி தான் இனி தமிழக அரசியல்.. ஒருவர் சினிமா பிரபலம்.. இன்னொருவர் அதிரடி அரசியலுக்கு பிரபலம்.. மூன்றாமவர் வாரிசு அரசியலில் வந்தவர்.. மூவருக்கும் கிட்டத்தட்ட வயதில் கொஞ்சம் தான் வித்தியாசம்.. இளைஞர்கள் ஆதரவு யாருக்கு இருக்கும்? இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? சபாஷ் சரியான போட்டி…ஜூன் 3, 2026, 11:50
2026ல் விஜய் சொல்லி அடிச்ச மாதிரி அண்ணாமலை 2031ல் சொல்லி அடிப்பார்.. விஜய்யை விட அண்ணாமலை கட்டமைப்பு வித்தியாசமாக இருக்கும்.. திமுக, அதிமுக மீதான வெறுப்பில் தான் மக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்தார்கள்.. விஜய் சிறந்த நிர்வாகி என்பதற்காக அல்ல.. ஆனால் அண்ணாமலை விஷயம் அப்படியல்ல.. படிப்பு, நிர்வாக திறமை, பொது அறிவு, அரசியல் அறிவு, உடனடியாக முடிவெடுக்கும் திறன், பத்திரிகையாளர்களை வச்சு செய்யும் திறமை, மக்கள் ஆதரவு எல்லாமே இருக்குது.. பாஜக அவரை மிஸ் செய்துவிட்டது.. தமிழக மக்கள் மிஸ் செய்ய மாட்டார்கள்.. அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்…ஜூன் 2, 2026, 19:05
எம்ஜிஆர் – கருணாநிதி போல்.. ஜெயலலிதா – ஸ்டாலின் போல்.. இனி தமிழ்நாட்டு அரசியல் விஜய் – அண்ணாமலை.. ஒருவர் பெரியார் ஆதரவாளர், இன்னொருவர் ஆன்மீக ஆதரவாளர்.. ஒருவர் சினிமாவில் பிரபலம், இன்னொருவர் ஐபிஎஸ் மூலம் பிரபலம்.. ஒருவர் அமைதியாக அரசியல் செய்வார், இன்னொருவர் அதிரடி அரசியல் செய்வார்.. ரெண்டு பேருக்கு இடையேதான் போட்டி.. ஒன்னு விஜய், இன்னொன்னு அண்ணாமலை.. அரசியல் களம் மாறுகிறது…ஜூன் 2, 2026, 16:31
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் இப்போதே 1 கோடி ஓட்டுகள் Confirm என்று ஒரு தனியார் சர்வே நிறுவனம் அடித்து சொல்கிறது… 30 லட்சம் பேர் இப்போதே உறுப்பினராக இணைத்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்றாங்க.. முடிவு அண்ணாமலை IPS கையில் .. தமிழகத்தின் எதிர்கால அரசியல் விஜய் – அண்ணாமலை தான்.. உதயநிதி ஓரமாக போகவும்.. ஸ்டாலின், எடப்பாடி ஓய்வு எடுக்கவும்.. ரெண்டு இளைஞர்கள் மாறி மாறி தமிழ்நாட்டை பாத்துக்கிடுவாங்க…ஜூன் 1, 2026, 14:30
தமிழ்நாட்டில் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தோல்வி என யார் சொன்னது? அமித்ஷாவின் நோக்கங்கள் என்னென்ன? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. அதிமுக அழிய வேண்டும்.. திமுக கூட்டணி உடைய வேண்டும்.. இந்த மூன்றையும் பாஜக செய்யவில்லை என்றாலும் தவெக செய்துவிட்டதல்லவா? அதிமுகவை கிட்டத்தட்ட முழுமையாக உடைத்தாகிவிட்டது.. திமுக கூட்டணியில் தேமுதிக தவிர வேறு எந்த கட்சியும் இல்லை.. ஆக மொத்தம் அமித்ஷா நினைத்தது நடந்துவிட்டது.. இனிமேல் அமித்ஷாவின் ஆட்டம் தவெக பக்கம் திரும்பும்.. அதற்கு முதல் பந்து தான் முதல்வர் விஜய்யை சந்திக்க மறுத்தது.. அடுத்தது ஒன்னொன்னா நடக்கும்…மே 31, 2026, 21:00
அரசியல் செய்ய பணம் தேவையில்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டார்.. நேர்மை, இளைஞர்களை கவரும் கொள்கைகள் மட்டும் இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதையும் விஜய் நிரூபித்துவிட்டார்.. இந்த இரண்டும் தான் அண்ணாமலைக்கு தரும் நம்பிக்கைகள்.. நேர்மை, இளைஞர்களை கவரும் கொள்கையோடு விஜய்க்கு இல்லாத ஒன்று அண்ணாமலையிடம் உள்ளது.. அதுதான் ஐபிஎஸ் அனுபவம் மற்றும் அரசியலில் ஆழமான அறிவு.. தனிக்கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கினால் தமிழக அரசியலில் எதிர்காலம் விஜய் – அண்ணாமலை தான்.. ரெண்டு திராவிட கட்சிகளும் காணாமல் போய்விடும்..மே 31, 2026, 16:08
விஜய் இல்லாத அரசியல் இனி தமிழகத்தில் இல்லை.. அடுத்தடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறலாம்.. அல்லது தோல்வியும் அடையலாம்.. ஆனால் அவரை அரசியலில் இருந்து யாராலும் வெளியேற்ற முடியாது.. விஜய் இனி முழுநேர அரசியல்வாதி என்பது காலத்தின் கட்டாயம்..மே 29, 2026, 18:22
24 கட்சி கூட்டணி இருக்கும்போதே விஜய்யை தோற்கடிக்க முடியலை.. இப்ப கூட்டணியும் இல்லை, மக்கள் ஆதரவும் இல்லை.. விஜய் அரசுக்கு வேற தினம் தினம் மக்கள் பாராட்டு குவியுது.. இனிமேல் ஆட்சிக்கு வந்துடலாம்ன்னு ரெண்டு திராவிட கட்சிகளும் கனவுல கூட நினைச்சிடாதீங்க… ஒரு 20 வருஷத்துக்கு எதிர்க்கட்சியா உட்காருங்க.. இல்லைன்னா ஓய்வெடுங்க.. அதுவும் முடியலைன்னா வேடிக்கை மட்டும் பாருங்க…மே 29, 2026, 14:25
மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஆளவிடாமல் குடைச்சல் கொடுத்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. இதைவிட பெரிய தண்டனையா கொடுப்பாங்க.. ஒரு 3 மாசம் ஆகட்டும் பார்ப்போம்ன்னு மக்களே பொறுமை காக்குறாங்க.. ஆனால் ஆட்சி அமைச்ச 25 நாளுக்குள்ள திமுக அல்லக்கைகள் துள்ளுது.. திமுகவுக்கு ஏழறையே இந்த ஜால்ரா போடுற கூட்டம் தான்.. இந்த கூட்டம் இருக்குற வரைக்கும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது…மே 28, 2026, 11:41
விஜய் அரசை பாஜக இப்போதைக்கு டிஸ்டர்ப் பண்ண வாய்ப்பு இல்லை.. தமிழகத்தில் பாஜகவுக்கு இருந்த பெரிய சவால் திமுகவும், திமுக கூட்டணியும்.. திமுகவையும் தோற்கடிச்சாச்சு.. கூட்டணி கட்சிகளையும் சைலண்ட் ஆக்கியாச்சு.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ செய்ய முடியாததை விஜய் தனியாக இருந்து செய்துள்ளார்.. காங்கிரஸ் விஜய் இணைவது அதிருப்தியாக இருந்தாலும் திமுக, அதிமுகவின் தோல்வி எதிர்காலத்தில் பாஜகவுக்கு லாபம் தான்.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத்தான் வருது…மே 28, 2026, 07:45
மத்திய அரசுடன் விஜய் இணக்கமாக இருந்தால் விசிக, இடதுசாரிகள் அதிருப்தி அடைவார்களா? ஆனால் இடதுசாரிகள் தவிர வேறு யாரும் ஆதரவு வாபஸ் என்று கூற முடியாது.. ஏனென்றால் அமைச்சர் பதவி கொடுத்து விஜய் லாக் செய்துவிட்டார்.. இடதுசாரிகள் 4 பேர் விலகினாலும் இப்போதைக்கு பிரச்சனை இல்லை.. ஒருவேளை எல்லோரும் சேர்ந்து ஆட்சியை கவிழ்த்தாலும் தேர்தலை தவிர வேறு ஆப்சன் இல்லை.. அப்போது விஜய் 200க்கும் மேல் அடித்துவிடுவார், இதையெல்லாம் மிரட்டுபவர்கள் யோசிப்பார்கள்.. மொத்தத்தில் விஜய் ஆட்சி மிரட்டப்படுமே தவிர கவிழ வாய்ப்பில்லை…!மே 28, 2026, 07:31
ஒரே கல்லுல ரெண்டு திராவிடத்தையும் வீழ்த்திட்டிங்க.. இதை நாங்க செய்யனும்ன்னு எதிர்பார்த்தோம், முடியலை, ஆனால் நீங்க செஞ்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. மீண்டும் தமிழ்நாட்டுல திராவிடம் வந்துடக்கூடாது.. உங்களுக்கு என்ன வேனுமோ நாங்க செய்ய தயாராக இருக்கின்றோம்.. விஜய்க்கு வாக்குறுதி தந்ததா டெல்லி? திமுக மாதிரி மோடியிடம் விஜய் மோத மாட்டார்.. கொள்கை எதிரிதான், ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி வேனும்ன்னா கொஞ்சம் அனுசரித்து தான் போகனும்..மே 27, 2026, 21:16