நாம எவ்வளவு மோசமான ஆட்சியை கொடுத்தோம், மக்கள் எவ்வளவு துயரப்பட்டார்கள், எவ்வளவு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டது, அதிகாரிகள் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டினோம் என்பதை கூட இன்னும் ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை.. நாம் நல்லாட்சி நடத்தினோம், இன்ஸ்டாவால தான் ஆட்சி மாறிடுச்சுன்னு இன்னும் நினைச்சுகிட்டு இருக்காரு.. இப்படிப்பட்டவரையா ஐந்து வருடங்கள் ஆள அனுமதித்தோம்..மே 29, 2026, 10:10
மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு கட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஆளவிடாமல் குடைச்சல் கொடுத்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. இதைவிட பெரிய தண்டனையா கொடுப்பாங்க.. ஒரு 3 மாசம் ஆகட்டும் பார்ப்போம்ன்னு மக்களே பொறுமை காக்குறாங்க.. ஆனால் ஆட்சி அமைச்ச 25 நாளுக்குள்ள திமுக அல்லக்கைகள் துள்ளுது.. திமுகவுக்கு ஏழறையே இந்த ஜால்ரா போடுற கூட்டம் தான்.. இந்த கூட்டம் இருக்குற வரைக்கும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது…மே 28, 2026, 11:41
ஒரு தொகுதிக்கு 4 அரசியல் ஆய்வாளர்கள்.. தேர்தல் ஸ்ட்ராட்டஜி சொல்ல ஒரு குழு.. கோடிக்கணக்கில் பணம் செலவு.. புகுந்து விளையாடிய ஐடி விங்.. இது பத்தாதுன்னு 24 மணி நேரம் தேர்தல் கணிப்புகளை கூறி வந்த உளவுத்துறை.. இத்தனை இருந்தும் கொளத்தூரில் கூட ஜெயிக்க முடியலையே ஸ்டாலின் சார்.. முதல்ல நீங்க உங்களை சுற்றி இருக்குற ஜால்ரா கூட்டத்தை விரட்டியடிங்க.. இல்லாட்டி கடைசி வரைக்கும் உங்களால எம்.எல்.ஏ கூட ஆக முடியாது.. முதல்ல தோல்வியை ஒத்துக்கோங்க.. அதுக்கு அப்புறம் தோல்விக்கு என்ன காரணம் ஆய்வு செய்யுங்க.. உங்களுக்கே ஒரு பெரிய உண்மை தெரியும்…மே 27, 2026, 21:30
ஸ்டாலினால் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை.. அதுவும் ஒரு சின்ன பையனிடம் தோற்றுவிட்டோமே என்ற கவலை.. 6 மாதங்கள் இந்த அரசை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம் என்றார்.. நாங்கள் தான் தவெக அரசை ஆதரிக்க அனுப்பி வைத்தோம் என்றார்.. எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு மந்திரிசபையில் பங்கேற்றன என்றார்.. இந்த ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்றார்.. இன்ஸ்டா அரசு என்கிறார்.. என்ன தான் புலம்பினாலும் இன்னும் 5 வருஷத்துக்கு நீங்க எம்.எல்.ஏ கூட ஆகமுடியாது.. சட்டமன்றத்திற்குள்ளும் நுழைய முடியாது..மே 26, 2026, 08:10
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட்டால் செம்ம வேடிக்கை இருக்குது.. தவெக வேட்பாளருக்கு விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐயுஎம்எல் ஆதரவு இருக்கும்… இன்னொரு பக்கம் அதிமுக நிறுத்தும் வேட்பாளருக்கு பாமக, அமமுக, பாஜக ஆதரவு இருக்கும்.. ஸ்டாலினுக்கு வைகோ ஆதரவு கூட இருக்குமான்னு தெரியலை.. அதிகபட்சம் தேமுதிக ஆதரவு மட்டும் தான் இருக்கும்.. ரிசல்ட்டை என்னன்னு சொல்லவே தேவையில்லை..மே 25, 2026, 15:45
திமுக தப்பு மேல தப்பு செய்துகிட்டே இருக்குது.. இப்ப கூட ஆட்சியை நடத்த நல்லாசி, நல்லாசோனை தருகிறோம் என்று பெருந்தன்மையாக சொல்லாமல், ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்று சபிக்கிறார்கள்.. இவர்கள் இருக்கும் வரை தவெகவுக்கு பிரச்சனையே இல்லை.. ஒரு நல்ல ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி இருந்தால் தான் ஆளுங்கட்சிக்கு சிரமம் ஏற்படும்.. இப்படிப்பட்ட எதிர்க்கட்சி இருந்தால் அடுத்த தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப ஈஸி.. கருணாநிதி இந்நேரம் இருந்திருந்தால் ஒரு ஆறு மாதம் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்.. எப்போது தப்பு நடக்குதோ, அப்போது விழித்து கொள்வார்…மே 25, 2026, 07:43
எதிரி யாருங்கிறதை தேர்தலுக்கு முன் விஜய் பிக்ஸ் பண்ணினாரு.. தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு முழங்கினாரு.. ஆனால் திமுகவோ எங்களுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி.. எங்களுக்கும் மோடிக்கும் தான் போட்டின்னு சம்மந்தமே இல்லாம உளருச்சு.. இனிமேல் திமுகவை எதிரியா கூட விஜய் மதிக்க மாட்டாரு.. அடுத்த தேர்தல்ல தவெகவுக்கு போட்டியே இருக்காது.. அப்படியே இருந்தாலும் அது திமுகவா இருக்காது.. இதுதான் யதார்த்தம்…மே 24, 2026, 18:15
கூட்டணி கட்சிகளை நம்புனது போதும்.. இனிமேல் எந்த கட்சியும் கூட்டணிக்கு வேண்டாம்.. 234 தொகுதியிலும் உதயசூரியனே நிக்கட்டும்.. நாமே களத்தில் இறங்கி வேலை செய்வோம்.. தொண்டர்களும் குஷியா வேலை செய்வாங்க.. யார் யாரையோ ஜெயிக்க வச்ச நம்ம தொண்டர்கள் நம்ம வேட்பாளரை ஜெயிக்க வைக்க மாட்டாங்களா? நான் சொல்றதை இனியாவது கேளுங்க.. முக ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்தாரா கனிமொழி?மே 24, 2026, 18:01
விஜய் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்று எடப்பாடியார் தான் முதலமைச்சர்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. மக்கள் திமுகவுக்கு அவ்வப்போது சான்ஸ் கொடுப்பார்கள்.. ஒரு கட்சி எந்த அளவு மோசமாக ஆட்சி செய்யும் என்பதை அறிவதற்கு.. அதன்பின் வெறுத்து போய் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வருவார்கள்.. ஆனால் 2021-2026 தமிழ்நாட்டின் மிக மோசமான ஆட்சி.. இன்னொரு சான்ஸ் கிடைக்கும் என கனவில் கூட நினைக்க வேண்டாம்..மே 24, 2026, 13:50
தோல்வி அடைந்தாலும் ஆணவம் குறையவில்லை திமுகவுக்கு.. ஒரு 2 வருட கட்சியிடம் 75 வருட பாரம்பரிய கட்சி தோற்றுவிட்டதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை.. தோல்விக்கான காரணம் லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் என்று தெரிந்தும் அதை சரி செய்வதற்கு மனமில்லை.. விஜய் எங்கே நல்லாட்சி கொடுத்து நிரந்தர முதல்வராகிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவதூறு செய்வதையே முழு நேர தொழிலாக மாற்றிவிட்டார்கள்.. இப்படியே போனால் அதிமுகவுக்கு முன்பாகவே திமுக காணாமல் போகும்..மே 24, 2026, 13:35
மேடைக்கு மேடை ‘அடிச்சார் கில்லி’னு நீங்க பில்டப் கொடுத்தப்பவே மக்கள் முடிவு பண்ணிட்டாங்கண்ணே… உங்க கில்லி கதையெல்லாம் கோட்டையில செல்லாது, எதிர்க்கட்சி வரிசையிலதான் முடியும்னு! யூடியூப் தம்ப்நெயில்ல சிக்ஸர் அடிச்ச கூட்டம், இன்னைக்கு தேர்தல் களத்துல கிளீன் போல்ட் ஆகி நிற்குது! விளம்பர வெளிச்சத்துல பிம்பம் வேணா உருவாக்கலாம் ஸ்டாலின் சார், ஆனா வாக்கு எண்ணிக்கையை உருவாக்க முடியாது!மே 23, 2026, 18:00
கட்சியை நடத்த சொன்னா அறிவாலயத்தை ‘முதியோர் இல்லம்’ ஆக்கி வச்சிருக்கீங்களே! 70 வயசுக்கு மேலயும் நாற்காலியை புடிச்சுக்கிட்டு தொங்குறதுக்கு பேரு அரசியல் இல்ல… ‘வாக்கிங் ஸ்டிக்’ பசி! ரிட்டையர்ட் ஆகி வீட்ல பேரன் பேத்தியோட விளையாட வேண்டிய வயசுல, இங்க வந்து இன்னும் வேட்புமனு தாக்கல் பண்ணிக்கிட்டு அலையுறீங்க! இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குங்கய்யா…மே 21, 2026, 15:30