Tag: Gen Z

dmk genz

திமுகவின் ஜென்-சி அணியில இருந்தா நீ என்ன பெரிய ஆளா? கையில ஆண்ட்ராய்டு போன் இருக்கு, டைப் பண்ண விரல் இருக்குன்றதுக்காக சி.எம் விஜய் குடும்பத்தை பத்தியும், பெண்கள் பத்தியும் இன்ஸ்டாகிராம்ல என்ன வேணா பேசுவியா? சோசியல் மீடியா என்ன உனக்கு எழுதி வச்ச சொத்தா… வாய்க்கு வந்தபடி வாந்தி எடுக்க? இதோ ஹைகோர்ட்டே உன் முகத்துல கறாரா சொல்லிருச்சு… நீ போட்ட போஸ்ட் இந்த சமூகத்தோட மனசாட்சியை உலுக்கியிருக்குன்னு! இனி உன் பழைய ஆட்டமெல்லாம் இங்க செல்லாது!

ஜூலை 6, 2026, 15:37
Genz dmk

திமுக செய்யும் மிகப்பெரிய தவறு Gen Z உடன் மோதுவது.. இனி வருங்கால அரசியல் Gen Z தான்.. தற்குறி என்று அவர்களை விமர்சித்து, அவர்களை பகைத்து கொண்டு, அல்லது போலி Gen Z கூட்டம் நடத்துவது மிகப்பெரிய மைனஸ்.. உதயநிதி இருந்தும் இந்த தவறு நடக்கிறது என்றால் இன்னும் அவருக்கு அரசியல் புரியவில்லை என்று தான் அர்த்தம்.. முதலில் ஜால்ரா கோஷ்டிகளை அடக்கி வையுங்கள்.. ஜூலி எல்லாம் ஒரே ஒரு வீடியோ போட்டால், திமுகவுக்கு ஒரு லட்சம் ஓட்டு லாஸ்.. உள்ள ஓட்டும் போயிரும்…

ஜூலை 2, 2026, 08:12
Genz dmk

ஜென் ஸி தலைமுறை ஒருத்தன் கூட திமுகவுக்கு போக மாட்டான்.. ஏன்னா திமுகவுக்கு போனா கடைசி வரைக்கும் தொண்டனாகத்தான் இருக்கனும்.. திறமைக்கேற்ற பதவி கிடைக்காது.. மிஞ்சி மிஞ்சி போன 200 ரூபாய் கிடைக்கும்.. ஆனா அதே தவெகவுக்கு போனா, பதவி கிடைக்க வாய்ப்பு.. அதிகாரம் கிடைக்க வாய்ப்பு.. அப்புறம் ஏன் ஜென் ஸி தவெகவுக்கு ஆதரவு தர மாட்டாங்க.. முதல்ல திமுக ஒன்னை புரிஞ்சிகிடனும்.. காலங்காலமா, வாழையடி வாழையாக ஒருசில குடும்பத்திற்கே பதவி கொடுக்குறதை நிப்பாட்டுங்க.. கட்சி தானா மீண்டு வந்துரும்…

ஜூன் 17, 2026, 16:33
gen alpha3

இதுவரைக்கும் 18 வயசுல இருந்து 35 வயசு வரைக்கும் இருந்த யங்ஸ்டர்ஸ் ஜென் ஸி தான் ஓட்டு போட்டுருக்கான்.. 13 வயசுல இருந்து 17 வயசு வரைக்கும் இருக்குறவன் 2031ல்ல ஓட்டு போடுவான்.. அப்ப அதிமுகவும் திமுகவும் காணாமல் போயிடும்.. அடுத்த தேர்தல்ல 200 ஈஸியா அடிச்சிரும்.. ஜென் ஆல்ஃபாவுக்கு 18 வயசு ஆயிருச்சுன்னா உங்க திராவிட டப்பா டான்ஸ் ஆடிடும்..

ஜூன் 16, 2026, 08:07
gen z vs dmk it wing

ஆட்சி, அதிகாரம் இல்லாதபோதே ஃபயர் விட்டவங்க நம்ம ஜென் ஸி பசங்க.. திமுகவோட ஒவ்வொரு சதியையும் தோலுரிச்சு காட்டினவங்க.. இப்ப ஆளுங்கட்சியா இருக்கும்போது சும்மா விடுவாங்களா? இன்னும் 100 வருஷம் ஆனாலும் எங்க பசங்க பார்க்குற வேலையை உங்க ஐடி விங்கால பார்க்க முடியாது.. ஏன்னா இது காசு வாங்காம விசுவாசத்திற்காக வேலை பாக்குற கூட்டம்.. உங்க ஐடி விங் காசுக்காக கூவுற கூட்டம்.. இதுதான் வித்தியாசம்..

ஜூன் 11, 2026, 11:59
vijay dmk1

திமுக தோத்ததுக்கு காரணம் திமிர் பேச்சு.. தன்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை அவன், இவன், நாய் என்று மரியாதை இல்லாமல் பேசுவது.. அமைச்சர்கள் முதல் அடிவருடிகள் முதல் ஆபாசமான பேச்சு.. இந்த பேச்சுக்கு ஜென் ஸியும் உங்களை நம்ப மாட்டான்.. ஜென் ஆல்ஃபாவும் உங்களை நம்ப மாட்டான்.. 50 வயசுக்கு மேல் உள்ளவங்க ஓட்டு கொஞ்சம் வரும்.. அதை வச்சிகிட்டு டெபாசிட்டை காப்பாத்திகிடலாம்.. இதுதான் இன்றைய திமுக நிலைமை…

ஜூன் 9, 2026, 13:54
annamalai questions

எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கலையே.. நாம மோடியின் ஆளுன்னு தெரிஞ்சிருச்சோ.. அண்ணாமலையின் புது இயக்கத்தில் சேர தயங்கும் ஜென் ஸி இளைஞர்கள்.. போன மாசம் வரைக்கும் விஜய்யை ஆதரிச்சிட்டு, இந்த மாசம் எப்படி அண்ணாமலையை ஆதரிப்பார்கள்.. ஜென் ஸி இளைஞர்கள் என்ன பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகளா? ஆதரவு என்பது தன்னெழுச்சியா வரனும்? விஜய்க்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம்…

ஜூன் 9, 2026, 09:43
gen alpha2

ஜென் ஸியை அடுத்து களத்தில் இறங்கும் ஜென் ஆல்ஃபா.. இந்த ஜென்மத்தில் திமுக, அதிமுக இனி ஆட்சிக்கு வர முடியாது.. ஜென் ஆல்ஃபா ஓட்டு போடும் வயது வரும் வரை விஜய் ஆட்சியில் இருப்பார்.. அதுக்கு அப்புறமும் இருப்பார்.. திராவிட கலாச்சாரத்தின் கலாச்சாரம் முடிந்தது.. விஜய் – அண்ணாமலை இடையே தான் இனி போட்டி.. இளைஞர்கள் கையில் எதிர்கால தமிழ்நாடு.. கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது..

ஜூன் 8, 2026, 10:43
tvk genz

ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… நாங்கள் கொத்தடிமைகள் என்பதில் பெருமை கொள்கிறோம்.. GenZ DMK மேடையில் பேசிய இளைஞர்.. இந்த ஆட்சியில் ஒரு தவறு நடந்தால் அதை நாங்கள் தட்டி கேட்போம்.. தவெகவுக்கு ஆதரவளித்த GenZ இளம்பெண்.. இதில் யார் உண்மையான GenZ? காலங்காலமாக கொத்தடிமையாக இருப்போம் என்பவரா? நாங்கள் ஆதரித்த அரசு என்றாலும் அதில் தவறு நடந்தால் கேள்வி கேட்போம் என்பவரா? முடிவை உங்கள் கையில் விட்டுவிடுகிறோம்…

ஜூன் 2, 2026, 07:27
Genz dmk

Gen Z திமுக மீட்டிங்கில் ஒருவர் பேசியது.. இது திமுக மீட்டிங் கிடையாது.. திமுக ஏற்பாடு செய்த மீட்டிங் கிடையாது.. இதில் கலந்து கொண்டவர்கள் திமுக உறுப்பினர்கள் கூட கிடையாது.. அப்ப எதுக்குடா அதை அண்ணா அறிவாலயத்தில நடத்துனீங்க.. மெரீனா பீச்சில நடத்த வேண்டியது தானே.. கலாய்க்கும் தவெகவினர்…

ஜூன் 1, 2026, 10:47
gen z dmk

டேய் நீங்கள்ல்லாம் Gen Z பசங்களா? 80, 90 எல்லாம் ஜீன்ஸ் போட்டுட்டு வந்து Gen Z பசங்கன்னு ஏண்டா உண்மையான Gen Z தலைமுறைய கேவலப்படுத்துறீங்க.. வெட்ட வெட்ட தழைக்கிறது ஆலமரம் இல்லடா, வாழை மரம்.. எழுதி கொடுத்த வசனத்தை கூட சரியா படிக்க தெரியலை.. நீங்கள்ல்லாம் Gen Zன்னு சொன்னா நாங்க நம்பனுமா? காமெடிக்கு ஒரு அளவில்லையா? போயி சுகர் மாத்திரையை போட்டுட்டு படுத்து தூங்குங்கப்பா…

மே 31, 2026, 11:04
vijay crowd

Gen Z வாக்குகள் மொத்தமாக சிந்தாமல், சிதறாமல் விழுந்தால் போதும் விஜய் ஜெயித்துவிடுவார்.. அவர் கட்சி ஆரம்பித்ததே அந்த நம்பிக்கையில் தான்.. புஸ்ஸி ஆனந்த் வேண்டுமானால் காமெடி பீஸாக இருக்கலாம்.. ஆனால் ஆதவ் அர்ஜூனா விஷயம் தெரிந்தவர்.. அவர் நிச்சயம் விஜய்யை கரை சேர்த்துவிடுவார்..!

நவம்பர் 19, 2025, 21:26