அரசை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க திமுகவுக்கு தகுதியில்லை.. 7 பட்டியல் இனத்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இதுவரை இடம் கொடுத்ததா? விசிக போன்ற கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததா? அறநிலையத்துறையை இதற்கு முன் திமுக பட்டியல் இனத்தவர்களுக்கு திமுக கொடுத்திருக்கின்றதா? இதை எதையுமே திமுக ஆட்சியில் இருக்கும்போது செய்யாமல், அதை தவெக செய்ய வேண்டும் என அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது? யார் யாரை எந்த துறைக்கு அமைச்சர் ஆக்கனும்ன்னு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு தெரியும்.. நீங்க பேசாம வேடிக்கை மட்டும் பாருங்க ஸ்டாலின் சார்…மே 24, 2026, 07:20
அமலாக்கத்துறை கடிதம் அனுப்புனா தவெக அரசு யோசிக்கும்னு தப்பு கணக்கு போடாதீங்க… கஜானாவை சுரண்டுனவங்க லிஸ்ட்டை முதலமைச்சர் விஜய் கையில் எடுத்தாச்சு, ஒப்புதல் கடிதத்துல இங்க் காயுறதுக்குள்ள ஆக்ஷன் இறங்கும்! செந்தில் பாலாஜியை விசாரிக்க கடிதம் மட்டும் வரட்டும், உடனே முதல்வர் விஜய் அனுமதி கொடுத்திருவார்.. கரூர் விவகாரம் உள்பட பல விஷயங்கள் வெளியே வருமா?மே 23, 2026, 22:15
எம்.ஜி.ஆர் சொன்னார், ஜெயலலிதா சொன்னாங்க… நடுவுல கொஞ்சம் சைலன்ட் ஆகிடுச்சுனு தப்பு கணக்கு போட்டீங்களா? இப்போ ட்ரெண்டே வேற தம்பி! ‘ஓம் சக்தி… பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி!’ இது வெறும் ஸ்லோகன் இல்ல, தமிழ்நாட்டோட அக்னி முழக்கம்! பல வருஷமா தூங்கிட்டிருந்த ஒரு பழைய சிம்ம முழக்கத்தை, இன்னைக்கு இருக்கிற 2K கிட்ஸ் வரைக்கும் ட்ரெண்ட் ஆக்கியிருக்கார் முதலமைச்சர் விஜய்!மே 23, 2026, 21:59
முன்னாடி எல்லாம் ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்கு அறிவாலயம் முன்னாடி கையேந்தி நிக்க வச்சீங்க… இனிமேல் அந்த பருப்பு வேகாது தம்பி! விசிகவும், ஐயுஎம்எல்-உம் இப்போ தவெக அமைச்சரவையில கம்பீரமா உட்கார்ந்திருக்காங்க. 2031-ல உங்க பழைய ‘திராவிட பந்தா’ அட்ரஸ் இல்லாம போகப்போகுது! 2031-ல திமுகவும், அதிமுகவும் தனித்து விடப்பட்டு அரசியல் அனாதையா நிக்கப் போறது உறுதி!மே 23, 2026, 21:40
மேடைக்கு மேடை ‘அடிச்சார் கில்லி’னு நீங்க பில்டப் கொடுத்தப்பவே மக்கள் முடிவு பண்ணிட்டாங்கண்ணே… உங்க கில்லி கதையெல்லாம் கோட்டையில செல்லாது, எதிர்க்கட்சி வரிசையிலதான் முடியும்னு! யூடியூப் தம்ப்நெயில்ல சிக்ஸர் அடிச்ச கூட்டம், இன்னைக்கு தேர்தல் களத்துல கிளீன் போல்ட் ஆகி நிற்குது! விளம்பர வெளிச்சத்துல பிம்பம் வேணா உருவாக்கலாம் ஸ்டாலின் சார், ஆனா வாக்கு எண்ணிக்கையை உருவாக்க முடியாது!மே 23, 2026, 18:00
திமுக எதிர்க்கட்சியா வந்தவுடன் 5 வருஷமா ஒளிஞ்சிகிட்டு இருந்த சமூக ஆர்வலர்கள் பொங்கிகிட்டு வந்துருவாங்க.. பியூஷ் மனுஷ் தன்னுடைய வேலையை ஆரம்பிச்சிட்டாரு.. பாடகர் கோவன் இனி வீதி வீதியா பாட்டு பாட வந்துருவாரு.. 5 வருஷமா தூங்கிய உதயகுமார், திருமுருகன் காந்தி எல்லாம் இனி 24 மணி நேரம் டியூட்டி பார்ப்பாங்க..மே 22, 2026, 15:29
திமுகவின் எதிர்காலம் பூஜ்ஜியம்ன்னு பிடிஆர் புரிஞ்சிகிட்டார்.. அதனால தான் அவர் அரசியலை விட்டே விலகிட்டார்.. நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜிங்கிற மாதிரி பிடிஆர் மீண்டும் அமெரிக்கா சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அவருடைய 30000 கோடி ஆடியோ தான் திமுகவின் சரிவுக்கு முதல் புள்ளி.. அப்போதே சுதாரித்து திமுக தனது தவறை உணர்ந்திருந்தால் இந்த தோல்வி ஏற்பட்டிருக்காது…மே 21, 2026, 18:30
இனிமேல் யாரும் தேவையில்லாம பிரஸ்மீட் வைக்காதீங்க.. பிரஸ்காரங்க நம்மகிட்ட பேட்டி வாங்கி, நாம சொன்ன தகவல்ல இருந்தே மீம்ஸ் போடுவாங்க.. விஜய் மாதிரி பிரஸ்ஸை சந்திக்காமல், மக்கள் பிரச்சனையை நேரா மக்கள் கிட்ட கொண்டு போவோம்.. பிரஸ்மீட் இல்லாமலேயே 5 வருஷம் அரசியல் செய்வோம்.. முக்கிய 2 கட்சிகள் எடுத்த முடிவு?மே 21, 2026, 17:59
கட்சியை நடத்த சொன்னா அறிவாலயத்தை ‘முதியோர் இல்லம்’ ஆக்கி வச்சிருக்கீங்களே! 70 வயசுக்கு மேலயும் நாற்காலியை புடிச்சுக்கிட்டு தொங்குறதுக்கு பேரு அரசியல் இல்ல… ‘வாக்கிங் ஸ்டிக்’ பசி! ரிட்டையர்ட் ஆகி வீட்ல பேரன் பேத்தியோட விளையாட வேண்டிய வயசுல, இங்க வந்து இன்னும் வேட்புமனு தாக்கல் பண்ணிக்கிட்டு அலையுறீங்க! இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குங்கய்யா…மே 21, 2026, 15:30
சோசியல் மீடியாவை எல்லா கட்சியும் தான் பயன்படுத்துச்சு.. திமுக சோசியல் மீடியாவுக்காக நூற்றுக்கணக்கான கோடி செலவு பண்ணுச்சு.. ஆனால் ரிசல்ட் இல்லையே.. தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் காசு வாங்காம தன்னெழுச்சியா வேலை செஞ்சாங்க.. காசு வாங்கிட்டு வேலை செய்றதுக்கும் தன்னெழுச்சியா வேலை செஞ்சதுக்கும் உள்ள வித்தியாசம் தான் வெற்றியும் தோல்வியும்.. காசு எப்பயும் வெற்றியை தந்திடாது.. இதை திமுக கடைசி வரைக்கும் புரிஞ்சுக்க போறதே இல்லை…மே 21, 2026, 15:19
பாஜகவை உள்ளே விடக்கூடாது என்ற பூச்சாண்டி காட்டியே ஜெயித்தவர்களுக்கு இப்போது வேண்டுமானால் தற்காலிக வெற்றி கிடைக்கலாம்.. ஆனால் அது நீண்ட கால தோல்வி தான்.. விஜய்யை எதிர்க்கும் வலிமை இனி அதிமுகவிடமும் இல்லை, திமுகவிடமும் இல்லை.. அண்ணாமலை மட்டுமே விஜய்க்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.. இனி தமிழக அரசியல் தவெக – பாஜக என மாறும் காலத்திற்கு வந்துவிட்டது.. ஒரு கட்சி வரக்கூடாது என்று தடுக்க தடுக்க தான் அது விஸ்வரூபம் எடுக்கும் என்பது விதி..!மே 18, 2026, 07:47
இதுவரை என்ன கட்சியில் என்ன நடக்குதுன்னே தெரியாமல் இருந்தாரா? தொண்டர்களின் மனநிலை தெரியாமல் இருந்ததால் தான் சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தாரா முக ஸ்டாலின்? கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் போல் இப்போது சுதாரித்துள்ளாரே? இப்போதாவது சுதாரித்தாரே என உடன்பிறப்புகள் நிம்மதி… தவறுகளை அறிந்து களைகளை நீக்கினால் கட்சி ஓரளவுக்கு மீண்டு வர வாய்ப்பு..மே 16, 2026, 13:28