10 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகுவார்கள்.. திருச்சி கிழக்கை சேர்த்து மொத்தம் 11 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. 11லும் விசில் ஜெயித்துவிட்டால் 118 வந்துவிடும்.. இதுதான் விஜய்யின் திட்டமா? தூய அரசியல் என்பது மக்களுக்கு தான்.. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் எதிராக தூய அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை.. ரெண்டு கட்சியையும் அடிச்சு நொறுக்குங்க தளபதி.. தவெக தொண்டர்கள் ஆவேசம்…!மே 26, 2026, 11:40
அடுத்த 5 வருஷத்துக்கு புதுசு புதுசா கிளம்புவாங்க.. சமூக ஆர்வலர்கள்.. சமுக பாதுகாப்பாளர்கள்.. மது ஒழிப்பு போராளிகள்.. பெண்கள் காவலர்கள்.. தலித் முன்னேற்ற குழுவினர்.. சமூக செயற்பாட்டாளர்கள்.. எல்லாரும் திமுக கைக்கூலிகள்.. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சிக்கு எதிராக காசுக்கு கூவிய களவாணிகள்.. 5 வருஷம் ஒளிஞ்சிருந்த இவங்க எல்லாரும் இப்ப கிளம்பி வந்துட்டாங்க.. ஆனால் அதிமுக மாதிரி அமைதியா தவெக இருக்கும்ன்னு மட்டும் நினைக்க வேண்டாம்.. நம்ம விர்ச்சுவல் வாரியர்ஸ் ஓட ஓட விரட்டுவாங்க…!மே 26, 2026, 11:04
ஸ்டாலினால் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை.. அதுவும் ஒரு சின்ன பையனிடம் தோற்றுவிட்டோமே என்ற கவலை.. 6 மாதங்கள் இந்த அரசை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம் என்றார்.. நாங்கள் தான் தவெக அரசை ஆதரிக்க அனுப்பி வைத்தோம் என்றார்.. எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு மந்திரிசபையில் பங்கேற்றன என்றார்.. இந்த ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்றார்.. இன்ஸ்டா அரசு என்கிறார்.. என்ன தான் புலம்பினாலும் இன்னும் 5 வருஷத்துக்கு நீங்க எம்.எல்.ஏ கூட ஆகமுடியாது.. சட்டமன்றத்திற்குள்ளும் நுழைய முடியாது..மே 26, 2026, 08:10
தவெகவுக்கு மக்கள் 108 மட்டும் கொடுத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்குதா? மெஜாரிட்டி இல்லாததால் தான் திமுக கூட்டணி உடைந்து திமுக தனிமையில் இருக்கிறது… மெஜாரிட்டி இல்லாததால் அதிமுகவில் ஒரு பிரிவு ஏற்பட்டு 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவளித்தார்கள்.. 118 விஜய்க்கு மக்கள் கொடுத்திருந்தால் இரு கூட்டணியும் அப்படியே இருந்திருக்கும்.. ஆக மொத்தம் மக்கள் ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்திருக்கிறார்கள்.. விஜய் கையில் ஆட்சி.. திமுக கூட்டணி பணால்.. அதிமுக கூட்டணி பணால்.. இதுதாண்டா தமிழக மக்கள்…மே 25, 2026, 16:45
விஜய் ஜெயிக்க கூடாதுன்னு பெரும் முயற்சி எடுத்தது அதிமுக, திமுகவை விட ஆர்.எஸ்.எஸ்.தான்.. அந்த அமைப்புக்கே தண்ணி காட்டியவர் விஜய்.. விஜய் வெற்றி ஒரு யுக புரட்சி.. திராவிடமும் ஒழிந்தது.. மதவாத அரசியல், ஜாதி அரசியலும் ஒழிந்தது.. இனி புதிய தமிழ்நாட்டில் பழைய சுயநல கட்சிகளுக்கு வேலை இல்லை.. தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் விஜய்யும் அண்ணாமலையும் தான்.. மாறி மாறி இருவரும் ஆட்சி செய்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை…மே 25, 2026, 11:30
திமுக கூட்டணி இனி வேண்டாம்ன்னு விசிக முடிவே பண்ணிருச்சு? வேங்கை வயல் பிரச்சனையில் இருந்து பல பிரச்சனைகளில் திமுக நடவடிக்கை சரியில்லை.. தொகுதி உடன்பாட்டிலும் சிக்கல்.. காட்டுமன்னார் கோவிலில் திருமா போட்டியிடுவதை வலுக்கட்டாயமாக தடுத்தனர்.. அவர் போட்டியிட்டு இருந்தால் இன்று அவர் அமைச்சர்.. விசிக வளர்ச்சியை திமுக கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.. இனிமேலும் திமுக கூட்டணியில் இருந்தால் கட்சியையே அழிச்சிடுவாங்க.. பாஜக எதிர்ப்புக்காக எவ்வளவு தான் பொறுத்திருப்பது.. முடிவு செய்துவிட்டாரா திருமா?மே 25, 2026, 08:11
திமுக தப்பு மேல தப்பு செய்துகிட்டே இருக்குது.. இப்ப கூட ஆட்சியை நடத்த நல்லாசி, நல்லாசோனை தருகிறோம் என்று பெருந்தன்மையாக சொல்லாமல், ஆட்சி சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்று சபிக்கிறார்கள்.. இவர்கள் இருக்கும் வரை தவெகவுக்கு பிரச்சனையே இல்லை.. ஒரு நல்ல ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி இருந்தால் தான் ஆளுங்கட்சிக்கு சிரமம் ஏற்படும்.. இப்படிப்பட்ட எதிர்க்கட்சி இருந்தால் அடுத்த தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப ஈஸி.. கருணாநிதி இந்நேரம் இருந்திருந்தால் ஒரு ஆறு மாதம் அமைதியாக வேடிக்கை பார்ப்பார்.. எப்போது தப்பு நடக்குதோ, அப்போது விழித்து கொள்வார்…மே 25, 2026, 07:43
எதிரி யாருங்கிறதை தேர்தலுக்கு முன் விஜய் பிக்ஸ் பண்ணினாரு.. தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டின்னு முழங்கினாரு.. ஆனால் திமுகவோ எங்களுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி.. எங்களுக்கும் மோடிக்கும் தான் போட்டின்னு சம்மந்தமே இல்லாம உளருச்சு.. இனிமேல் திமுகவை எதிரியா கூட விஜய் மதிக்க மாட்டாரு.. அடுத்த தேர்தல்ல தவெகவுக்கு போட்டியே இருக்காது.. அப்படியே இருந்தாலும் அது திமுகவா இருக்காது.. இதுதான் யதார்த்தம்…மே 24, 2026, 18:15
கூட்டணி கட்சிகளை நம்புனது போதும்.. இனிமேல் எந்த கட்சியும் கூட்டணிக்கு வேண்டாம்.. 234 தொகுதியிலும் உதயசூரியனே நிக்கட்டும்.. நாமே களத்தில் இறங்கி வேலை செய்வோம்.. தொண்டர்களும் குஷியா வேலை செய்வாங்க.. யார் யாரையோ ஜெயிக்க வச்ச நம்ம தொண்டர்கள் நம்ம வேட்பாளரை ஜெயிக்க வைக்க மாட்டாங்களா? நான் சொல்றதை இனியாவது கேளுங்க.. முக ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்தாரா கனிமொழி?மே 24, 2026, 18:01
விஜய் ஆட்சி இப்ப உடனே கவிழக்கூடாதுன்னு விஜய்யை விட திமுகவும், அதிமுகவும் பயப்படுவாங்க.. விஜய் ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அல்லது தானாக கவிழ்ந்தால் இன்னொரு தேர்தலை தவிர வேறு வழியில்லை.. தேர்தல் வந்தால் அதிமுகவும் திமுகவும் குளோஸ்.. விஜய் ஈசியா 200 அடிச்சிடுவார்.. அப்புறம் எதிர்க்கட்சியா கூட உட்கார முடியாது.. ஒரு ரெண்டு மூனு வருஷம் ஆகட்டும்.. முடிஞ்ச வரைக்கும் விஜய் பேரை கெடுக்க முயற்சி செய்வோம், அப்புறம் தேர்தல் வந்தால் சமாளிக்கலாம்.. இதுதான் திமுக, அதிமுவோட எண்ணம்…!மே 24, 2026, 17:45
தோல்வி அடைந்தாலும் ஆணவம் குறையவில்லை திமுகவுக்கு.. ஒரு 2 வருட கட்சியிடம் 75 வருட பாரம்பரிய கட்சி தோற்றுவிட்டதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை.. தோல்விக்கான காரணம் லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் என்று தெரிந்தும் அதை சரி செய்வதற்கு மனமில்லை.. விஜய் எங்கே நல்லாட்சி கொடுத்து நிரந்தர முதல்வராகிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவதூறு செய்வதையே முழு நேர தொழிலாக மாற்றிவிட்டார்கள்.. இப்படியே போனால் அதிமுகவுக்கு முன்பாகவே திமுக காணாமல் போகும்..மே 24, 2026, 13:35
நன்றி மறந்த காங்கிரஸ்.. இனி காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.. உதயநிதி ஆவேசம்.. காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது திமுக அமைச்சரவையில் இருக்கும்.. ஆனால் திமுக அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் கொடுக்க மாட்டீங்க.. நீங்க என்ன சேர்க்குறது, காங்கிரஸ் இனி நீங்க கூப்பிட்டாலும் வராது.. தவெக + காங்கிரஸ் இயற்கையான கூட்டணி.. விஜய் எப்படியும் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்கிடுவார்.. ஏண்டா காங்கிரஸை விட்டோம்ன்னு அப்ப கதறுவிங்க.. காங்கிரஸ் தொண்டர்கள் பதிலடி…!மே 24, 2026, 07:30